ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

வீரா பட ரகசியத்தை கூறி மீனாவை வெட்கப்பட வைத்த ரஜினி.. குசும்புக்கார அண்ணாத்த

ரஜினி படத்தில் குழந்தையாக நடித்து பிற்காலத்தில் ரஜினிக்கே ஜோடியாக சில படங்களில் நடித்தவர்தான் மீனா. ரஜினி மற்றும் மீனா ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் அப்படி ஒரு வரவேற்பு கிடைத்தது.

அதிலும் முத்து படம் எல்லாம் வேற லெவல் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து ரஜினி மற்றும் மீனா நடிப்பில் வெளியான வீரா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது.

தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் மீனா மற்றும் ரஜினி ஆகிய இருவரும் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு முறைப்பொண்ணு வேடத்தில் மீனா நடித்து வருவதாகவும் செய்திகள் கிடைத்தன. இது ஒருபுறமிருக்க நீண்ட வருடங்களுக்கு பிறகு ரஜினி மீனா உடன் இணைந்து நடிப்பதால் கடைசியாக நடித்த படத்தை பற்றி இருவரும் நிறைய பகிர்ந்து கொண்டார்களாம்.

மேலும் படக்குழுவினர் அவ்வளவு பேர் முன்னிலையிலும் நீ என்னை ஏமாத்திட்ட என்று சொன்னதும் மீனாவுக்கு தலைகால் புரியவில்லை. என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க என்று கேட்டாராம்.

ஆமாம், இத்தனை வருடம் கழித்து எங்களுக்கு முகமெல்லாம் மாறி வயதாகிவிட்டது, ஆனால் நீ மட்டும் வீரா படத்தில் பார்த்தது போல அப்படியே இருக்கியே என ஐஸ் வைத்தாராம். இதைக்கேட்டு வெட்கத்துடன் சிரித்தபடியே ரஜினியுடனான காட்சியை நடித்துக் கொடுத்தாராம் மீனா.

annaatthe-rajini-meena-cinemapettai
annaatthe-rajini-meena-cinemapettai

Trending News