புதன்கிழமை, ஜனவரி 22, 2025

டேய் சம்மந்தி, மோகன் பாபுவை உரிமையாக கூப்பிட்ட ரஜினி.. நிறைவேறாமல் போன ஆசை, ஏன்.?

Rajini: ரஜினியும் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவும் எந்த அளவுக்கு நெருங்கிய நண்பர்கள் என அனைவருக்கும் தெரியும். இருவருமே ரொம்பவும் கஷ்டப்பட்டு தான் சினிமா பயணத்தை தொடங்கினார்கள்.

அப்போதிலிருந்தே இவர்களுடைய நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் மோகன் பாபுவுக்காக ரஜினி தெலுங்கு படத்தில் கெஸ்ட் ரோலில் கூட நடித்திருக்கிறார்.

அதேபோல் இருவரும் வாடா போடா என பேசிக்கொள்ளும் அளவுக்கு நெருங்கியவர்கள். அதனாலயே இருவரும் சம்மந்தியாக மாறவும் முடிவு செய்தார்களாம்.

ஒருமுறை இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது மோகன் பாபு தான் இந்த ஐடியாவை சொல்லி இருக்கிறார். உனக்கும் ரெண்டு பொண்ணு இருக்க எனக்கும் ரெண்டு பையன் இருக்காங்க.

மோகன் பாபுவை உரிமையாக கூப்பிட்ட ரஜினி

நாம ஏன் சம்மந்தியா மாறக்கூடாது என சொல்லி இருக்கிறார். ரஜினிக்கும் இது ரொம்பவும் பிடித்து இருக்கிறது அதிலிருந்து மோகன் பாபுவை எங்கு பார்த்தாலும் டேய் சம்பந்தி என உரிமையாக கூப்பிடுவாராம்.

ஆனால் பிள்ளைகள் திருமண வயதை எட்டிய பிறகு இந்த முடிவு மாறி இருக்கிறது. அதாவது மோகன் பாபுவின் மகன்கள் சரியாக வருவார்களா என்ற தயக்கம் ரஜினிக்கு இருந்திருக்கிறது.

ஒரு நண்பராக மோகன்பாபுவும் இதைத்தான் நினைத்திருக்கிறார். என் பையன்கள் சரி கிடையாது உன் மகள்களுக்கு நல்ல இடமா பார்த்து கல்யாணம் செய் என கூறியிருக்கிறார்.

அதன் பிறகு தான் ரஜினி தன் மகள்களுக்கு மணமுடித்திருக்கிறார். ஆனால் இரண்டு மகள்களின் திருமண வாழ்க்கையும் சோதனையாக தான் அமைந்தது.

இருப்பினும் மோகன் பாபு நட்புக்கு கொடுத்த மரியாதை ஆச்சரியப்பட வைக்கிறது. அதனாலேயே ரஜினிக்கு தன்னுடைய மற்ற நண்பர்களை காட்டிலும் இவர் மீது அதிக அன்பும் மரியாதையும் இருக்கிறது.

Trending News