ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

தந்திரமாக வேலை செய்யும் ரஜினி, விஜய்.. மாட்டிக்கொள்ளப் போவது யார்?

தற்போது தமிழ் சினிமாவில் வசூல் ராஜாவாக வலம் வருபவர்கள் ரஜினி மற்றும் விஜய். சில வருடங்களாக இவர்கள் இருவரின் படங்களும் வசூல் சாதனை படைத்த பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வருகிறது. ரஜினியின் எந்திரன், 2.o, கபாலி, காலா, பேட்ட, அண்ணாத்த போன்ற படங்கள் வசூலை வாரி குவித்தது.

அதேபோல் விஜய்யின் சர்கார், பிகில், மெர்சல், மாஸ்டர் போன்ற படங்களும் அதிக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் இவர்கள் இருவரின் படங்களுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரஜினியின் அண்ணாத்த பட இயக்குனர் சிறுத்தை சிவா தற்போது விஜய்யை சந்தித்த கதை சொல்லி உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தை வைத்து சிறுத்தை சிவா தொடர்ந்து நான்கு படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் விஜய் படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார் என கூறப்படுகிறது.

அதேபோல் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ரஜினியின் தலைவர் 169 படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியான நிலையில் விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு ரஜினியின் அண்ணாத்த பட இயக்குனர் விஜய்யின் படத்தை இயக்குவதும், விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் தற்போது ரஜினியை படத்தை இயக்குவது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு படங்களுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

நெகடிவ் விமர்சனங்கள் பெற்ற இயக்குனர்களை இவ்வாறு பெரிய நடிகர்கள் தேர்வு செய்து இருப்பது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கதை மீது உள்ள நம்பிக்கையால் ரஜினி மற்றும் விஜய் இந்த இயக்குனர்களை தேர்வு செய்துள்ளார்கள் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Trending News