திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

விஜய்யை விட நான் ஒன்னும் குறைச்சல் இல்லை.. ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு டோஸ் விட்ட ரஜினிகாந்த்

விஜய் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்ததைத் தொடர்ந்து சம்பள விஷயத்திலும் ரஜினியை ஏஜிஎஸ் நிறுவனம் நோகடித்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது.

விஜய் நடிப்பில் உருவான பிகில் படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் அதன்பிறகு பெரிய அளவு படத்தயாரிப்பில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு கொரோனாவையும் ஒரு காரணமாகச் சொல்லலாம்.

இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது ஏஜிஎஸ் நிறுவனம். ரஜினி தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். அண்ணாத்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் தற்போது வட இந்தியாவில் நடைபெற்று வருகின்றன.

இதை முடித்த பிறகு இளம் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராமல் இருப்பதற்கு சம்பள விஷயம் தான் காரணம் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். தற்போது ரஜினியின் சம்பளம் நூறு கோடியைத் தாண்டி விட்டது என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். ஆனால் சமீபத்திய தியேட்டர் நிலைமைகளை காரணம் காட்டி ரஜினிக்கு 70 கோடி சம்பளம் பேசியதாம் ஏஜிஎஸ் நிறுவனம்.

ஆனால் ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் விஜய் தற்போது அடுத்த படத்திற்கு 100 கோடி சம்பளம் வாங்கும் நிலையில் நான் மட்டும் என்ன குறைச்சலா எனும் அளவுக்கு கோபப்பட்டு விட்டாராம் ரஜினிகாந்த். இதனால் அதிர்ந்து போன ஏஜிஎஸ் நிறுவனம் கேட்டதைக் கொடுத்து விடுகிறோம் என கூறி அடுத்த படத்திற்கு ரஜினியை கமிட் செய்து விட்டார்களாம்.

rajini-desingh-periyasamy
rajini-desingh-periyasamy

Trending News