செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மகள் முறை பிரபலத்தை ஜோடியாக நடிக்க கேட்ட ரஜினி.. அதிர வைக்கும் முத்து பட மீனாவின் சீக்ரெட்

90 காலகட்டத்தில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருந்த ரஜினியின் நடிப்பில் வெளிவந்த முத்து திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பொதுவாகவே ரஜினி, கே எஸ் ரவிக்குமார் கூட்டணியில் வெளிவரும் படங்கள் அனைத்தும் மெகா ஹிட் அடிக்கும். அந்த வகையில் 1995 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் வெள்ளிவிழா கொண்டாடியது.

மீனா, சரத்பாபு, ரகுவரன், வடிவேலு, செந்தில் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்த இந்த படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் மீனா ரங்கநாயகி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். மேலும் அதில் ரஜினி மற்றும் மீனாவின் கெமிஸ்ட்ரி மற்றும் பாடல் காட்சிகள் என அனைத்தும் பயங்கரமாக இருக்கும்.

Also read: சூப்பர்ஸ்டாருக்கு இசையமைக்கப் போகும் இளம் ஹீரோ.. பிரதீப் ரங்கநாதனின் கனவு நிறைவேறுமா?

அதற்கு முன்பு அவர்கள் இருவரும் எஜமான், வீரா ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்திருந்தனர். அதை தொடர்ந்து மூன்றாவதாக மீண்டும் சூப்பர் ஸ்டாருக்கு மீனா ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபலமே வேறு. இது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. தற்போது அந்த பிரபலமே இது குறித்து வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

அதாவது ஒய் ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தியை தான் முதலில் அந்த கேரக்டரில் நடிக்க வைக்க ரஜினி நினைத்தாராம். மதுவந்தி ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்தின் அக்கா மகள் ஆவார். அப்படி பார்த்தால் ரஜினி அவருக்கு சித்தப்பா முறை. மகள் முறையில் இருக்கும் அவரை ரஜினி தனது ஜோடியாக நடிக்க வைக்க இருந்தார் என்ற செய்தி பலருக்கும் அதிர்ச்சியாக தான் இருக்கும்.

Also read: பேராசையால் சிதைந்து போன ரஜினியின் கூட்டணி.. ஓவர் பந்தா காட்டியதால் துரத்தி விட்ட தயாரிப்பாளர்

ஆனால் இந்த தகவலை மதுவந்தியே ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார். மேலும் அந்த சமயத்தில் சித்தப்பா என்னிடம் கேட்டபோது நான் சிறு பெண்ணாக இருந்தேன். அதனால் என்னுடைய பாட்டி அதற்கு மறுப்பு தெரிவித்தார் என்று அவர் அழுங்காமல் ஒரு குண்டை தூக்கி போட்டு இருக்கிறார். இதை கேட்ட பலரும் முத்து பட மீனா கதாபாத்திரத்தில் இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கிறதா என்று ஆச்சரியப்படுகின்றனர்.

ஒரு சில ரசிகர்கள் நல்ல வேலை அந்த சம்பவம் மட்டும் நடக்கவில்லை என்று கிண்டலாக கூறி வருகின்றனர். மேலும் சில ரசிகர்கள் அப்படி ஒரு விஷயம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை தலைவர் அப்படி எல்லாம் கேட்டிருக்க மாட்டார் என்றும் கூறுகின்றனர். தற்போது மதுவந்தி கூறிய இந்த விஷயம் சோசியல் மீடியாவில் பலராலும் கலாய்க்கப்பட்டு வருகிறது. மேலும் பல மீம்ஸ்களும் அவரைப் பற்றி பறந்து கொண்டிருக்கிறது.

Also read: ரஜினி கொடுத்த ஜெயிலர் அப்டேட்.. சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுக்க தயாராகும் சூப்பர் ஸ்டார்

Trending News