வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

73 வயதில் ரஜினிக்கு வந்த வாய்ப்பு.. தலைவர் என்னைக்கும் நம்பர் ஒன் என்பது இதுல தெரியுது.!

Actor Rajini: ரஜினி தற்போது 73 வயது ஆனாலும் படத்தை தாங்கும் கதாநாயகனாக நடித்து வருகிறார். மற்ற நடிகர்களால் இது செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான். அதுவும் அவருடைய ஜெயிலர் படம் அதிக வசூல் செய்த சாதனை படைத்திருந்தது. இப்போதும் தனது சூப்பர் ஸ்டார் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த சூழலில் பெரும்பாலான நடிகர்கள் இப்போது பாலிவுட், ஹாலிவுட் போன்ற படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தனுஷ் எல்லா மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இப்போது விஜய் சேதுபதியும் அதேபோல் பாலிவுட்டில் எக்கச்சக்க படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

ஷாருக்கானின் ஜவான் படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 73 வயதில் ரஜினிக்கு ஹாலிவுட்டில் வாய்ப்பு வந்திருக்கிறது. அதாவது அவெஞ்சர்ஸ் இயக்குனர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது சில விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

Also Read : 1979ல் தலைக்கால் புரியாமல் ஆடிய ரஜினி கமல்.. திருந்திய உலக நாயகன் அட்ராசிட்டி செய்த தலைவர்

அப்போது அவெஞ்சர்ஸ் மாதிரி படத்தில் இந்தியாவில் உள்ள நடிகர்களில் யாரை நடிக்க வைப்பீர்கள் என்று கேட்டதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் ஜோ ரூஸோ ரஜினியை கூறியிருந்தார். ஏனென்றால் ஏற்கனவே எந்திரன் படத்தில் ரோபோவாக ரஜினி பின்னி பெடல் எடுத்திருப்பார். இதுவே இயக்குனருக்கு மிகப்பெரிய விருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் ரஜினி என்னுடைய படத்தில் நடிக்க சம்மதித்தால் கண்டிப்பாக நடிக்க வைப்பேன் என்று அவெஞ்சர்ஸ் இயக்குனர் ஜோ ரூஸோ சொல்லி உள்ளார். தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட்டில் ரஜினிக்கு நம்பர் ஒன் இடம் இருக்கிறது என்பது இவர் கொடுத்த பேட்டியில் இருந்தே தெரிய வருகிறது.

மேலும் ரஜினி இது போன்ற ஹாலிவுட் படங்களில் நடிப்பாரா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் இப்போது ஞானவேல் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக லோகேஷ், சன் பிக்சர்ஸ் கூட்டணியில் நடிக்கிறார். ஆகையால் தமிழ் சினிமாவிலேயே அடுத்தடுத்த படங்கள் ரஜினிக்கு வரிசை கட்டி நிற்கிறது.

Also Read : இந்த நாலு பேருக்கு கடைசி படமாக அமைந்த இந்தியன் 2.. ரஜினி, கமலுடன் முடிந்து போன குணசேகரனின் சகாப்தம்

Trending News