கிட்ட தட்ட நாற்பதாண்டு காலமாக ஒரு தொழிலில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. அதுவும் சினிமாவில் இப்படி இருப்பது ரொம்ப கடினம். ஆனால் அதை அசால்ட்டாக செய்தவர்தான் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ரஜினியின் படம் வெளியாகும்போது பல நடிகர்களும் தங்களுடைய படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்து விடுவார்கள். அப்படிப்பட்ட ரஜினியே ராஜ்கிரண் படத்தை பார்த்து அந்தப் படத்துடன் மோத வேண்டாம் எனக் கூறியது அனைவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுக்கலாம்.
தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஒரு கோடி சம்பளம் வாங்கியவர் ராஜ்கிரண் தான் பல பத்திரிகைகளில் செய்தியாக வந்தது. அதுமட்டுமில்லாமல் அந்த காலகட்டங்களில் ராஜ்கிரண் படங்கள் தாறுமாறாக வெற்றி பெற்று வந்தன.
மேலும் ராஜ்கிரணுக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகளும் உருவாக்கினார். இந்நிலையில் 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டுக்கு ரஜினியின் வீரா மற்றும் ராஜ்கிரணின் எல்லாமே என் ராசாதான் படமும் ஒரே தேதியில் வெளியாக இருந்தது.
இதைக் கேள்விப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய வீரா படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைக்குமாறு தயாரிப்பாளரிடம் கூறினாராம். அதற்கு காரணம் யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது எனவும், ராஜ்கிரன் படங்களுக்கு ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் இருக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார்.
இதனால் இரண்டு படமும் பெரிய அளவு வசூல் செய்ய முடியாத நிலைமை ஆகிவிடும் என்பதால் ராஜ்கிரண் படம் வெளியான பிறகு ஒரு சில வாரங்கள் கழித்து நம்முடைய படத்தை ரிலீஸ் செய்து கொள்ளலாம் என தெரிவித்தாராம். ஆனால் எதிர்பாராத விதமாக ராஜ்கிரன் படத்தின் சூட்டிங் நடக்காமல் அந்த தேதியில் படம் வெளியாகாமல் போனது. பின்னர் குறித்த அதே தேதியில் ரஜினியின் வீரா படம் வெளியாகி வெற்றி பெற்றது.