தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி இயக்குனர்களும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவது தான் தன்னுடைய வாழ்நாள் கனவு என தொடர்ந்து கூறி வருகின்றனர். அதை நம்பி வாய்ப்பு கொடுத்த சில படங்கள் ரஜினியின் கையை கடித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இன்னும் ஓரிரு தினங்களில் ரஜினியின் காட்சிகள் மொத்தமும் முடிவடைய உள்ளன.
இந்நிலையில் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மேலும் சில படங்கள் தொடர்ந்து நடிக்க ரஜினி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் இதில் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு எடுத்துள்ளார் ரஜினி இளம் இயக்குநர்களை மட்டும் பரிந்துரை செய்து வருகிறாராம். முன்னணி இயக்குனர்களை எதற்கும் பத்தடி தள்ளியே வைத்து வருகிறார்.
அதற்கு காரணம் சமீபத்தில் முருகதாசை நம்பி தர்பார் பட வாய்ப்பைக் கொடுத்ததுதானாம். விஜய்யை வைத்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த ஏ ஆர் முருகதாஸ் ரஜினியை வைத்து தர்பார் என்ற படத்தை கொடுத்தார். பல வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் பல பஞ்சாயத்துகளில் சிக்கியது தர்பார் படத்தின் மூலம்தான்.
அதுமட்டுமில்லாமல் தர்பார் படமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றிப்படமாக அமையவில்லை. இதன் காரணமாக இனி முருகதாஸ் என்னதான் என்னுடைய ரசிகராக இருந்தாலும் அவருக்கு வாய்ப்பு இல்லை என்பதை மட்டும் சொல்லி விடுங்கள் என தன்னுடைய வட்டாரங்களில் கூறிவிட்டாராம் ரஜினி.