தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற மகுடத்துடன் கெத்தாக வலம் வருபவர்தான் நடிகர் ரஜினிகாந்த். சாதாரண கண்டக்டராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இருப்பினும் இவர் பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில், கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான பிரமாண்ட திரைப்படமான ‘சிவாஜி’ படத்திற்காக இயக்குநர் ஷங்கரும், நடிகர் ரஜினிகாந்தும் வாங்கிய டோக்கன் அட்வான்ஸ் வெறும் ரூ.1001 மட்டும் தானாம்.
ஏனென்றால் படத்தை தயாரிப்பதற்காக ஏவிஎம் நிறுவனம் முதலீட்டு தொகையை வங்கியிலிருந்து பெறவேண்டியதிருந்ததால், அட்வான்ஸ் பணமாக பெரிய தொகையை ஏவிஎம் நிறுவனம் சூப்பர் ஸ்டாருக்கும் ஷங்கருக்கும் கொடுக்கவில்லையாம்.
கையிலிருந்த ரூ.1001 மட்டுமே அவர்களுக்கு அட்வான்ஸாக கொடுத்துள்ளார். அதன்பின் மொத்தத் தொகையையும் ஏவிஎம் நிறுவனம் சூப்பர் ஸ்டாருக்கு கொடுக்க சென்றபோது படம் முழுவதையும் எடுத்து, வெற்றி பெற்ற பிறகே எனக்கு பணம் கொடுத்தால் போதும்.
ஏனென்றால் என்னுடைய பணம் வங்கியில் இருப்பதும், ஏவிஎம் நிறுவனத்திடம் இருப்பதும் ஒன்றுதான் என்று, எந்த ஒரு நடிகரும் சொல்லாததை சூப்பர்ஸ்டார் சொன்னதாக ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் எம் சரவணன் தனது பேட்டியின் மூலம் பகிர்ந்துள்ளார்.
எனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெறும் ரூ.1001 டோக்கன் அட்வான்ஸ் பெற்று படம் நடித்து கொடுத்ததை அறிந்த அவருடைய ரசிகர்கள் வியப்பின் உச்சத்திற்கே சென்றுள்ளனர்.