Rajini: ரஜினி இப்போது வேட்டையன் பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். அவ்வப்போது படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகும் போட்டோக்கள் ரசிகர்களை ஆரவாரப்படுத்தி வருகிறது.
அதேபோல் லோகேஷ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் கூலி படத்தின் டைட்டில் டீசரும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எப்போது இந்த ஷூட்டிங் தொடங்கும், அடுத்த அப்டேட் என்ன என்பதையும் ரசிகர்கள் கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில் தலைவர் தன்னுடைய அடுத்த பட இயக்குனரையும் உறுதி செய்து இருக்கிறார். அந்த இயக்குனரை வேட்டையன் படப்பிடிப்பு தளத்தில் அவர் இரண்டு முறை சந்தித்திருக்கும் செய்தியும் தற்போது கசிந்துள்ளது.
தலைவருடன் நஹாஸ் ஹிதாயத்
அதன்படி மலையாளத்தில் வெளிவந்து ஹிட் ஆன RDX படத்தின் இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் தான் அந்த அதிர்ஷ்டக்கார இயக்குனர். இவர் ரஜினியிடம் ஒரு ஒன் லைன் கதையை சொல்லி இருக்கிறாராம்.
அது ரொம்பவும் பிடித்துப் போனதால் தலைவரும் அடுத்த படத்தில் இணையலாம் என கூறியிருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக மொத்தம் தலைவர் ரெஸ்ட் என்பது இல்லாமல் ஓடி ஓடி நடிக்க தயாராகி விட்டார். வேட்டையன் அக்டோபர் மாதத்தை குறி வைத்து வரும் நிலையில் கூலி, தலைவர் 172 என ரசிகர்களுக்கு அடுத்தடுத்த ஆச்சரியங்களும் வரிசை கட்டுகிறது.