ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

அஜித்-க்கு ஆறுதல் கூறி ரஜினி போட்ட Twitter பதிவு..  அடுத்தடுத்து ரிலீஸ் செய்யத் துடிக்கும் AK

அதிக எதிர்பார்ப்பை கிளப்பிய விடாமுயற்சி பொங்கலுக்கு வரும் என்று எதிர்பார்த்து கடைசியில் ஏமாற்றம் தான் மிச்சம்.

இன்னும் படம் சென்சார் செல்லாததால் காலதாமதம் ஆகும் என்பதால் ரிலீஸ் தேதியை தள்ளிப் போட்டுள்ளது லைக்கா நிறுவனம். 

இதனால் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவிப்பது போல் லைக்கா அறிக்கை ஒன்றை வெளியிட்டு தலையில் இடி இறக்கி விட்டது.

ரஜினி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து twitter பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார் அதில் “நல்லவங்களா ஆண்டவன் சோதிப்பான், ஆனா கைவிடமாட்டான்” என்பது போன்ற பதிவு அஜித்துக்கும், அஜித் ரசிகர்களுக்கும் ஆறுதலாக உள்ளதாம்.

rajini-twit-new-year
rajini-twit-new-year

எப்படியாவது இந்த ஏமாற்றத்தை சரி செய்வதற்காக ஜனவரி கடைசி வாரம் அல்லது பிப்ரவரியில் விடாமுயற்சியும், ஏப்ரல் 10ம் தேதி Good Bad Ugly வெளிவரும் என அஜித்தின் தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருஷத்துக்கு ஒரு படம் ரிலீஸ் செய்யும் அஜித் தற்போது ரெண்டு மாத இடைவேளையில் இரண்டு படம் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Trending News