ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

குட் பேட் அக்லியுடன் மோதுகிறதா கூலி.? நல்லவேளை கங்குவா 2-க்கு பாதிப்பு இல்ல

Rajini-Ajith: சூப்பர் ஸ்டார் இப்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். அதில் வேட்டையன் படத்திற்கு பிறகு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.

சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் என பல முக்கிய பிரபலங்கள் இதில் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படம் அடுத்த வருடம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளிவரும் என செய்திகள் கசிந்தது.

ஆனால் தற்போதைய தகவலின்படி கூலி குட் பேட் அக்லியுடன் மோதுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறதாம். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் இப்படம் பொங்கல் திருநாள் ஸ்பெஷலாக வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நேருக்கு நேர் மோதும் ரஜினி அஜித்

ஆனால் அதே தினத்தில் விடாமுயற்சி வரும் என லைக்காவும் அறிவித்திருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இருப்பினும் விடாமுயற்சி நீண்ட இழுப்பறிக்கு பின் வெளியாக இருக்கிறது.

அதனால் குட் பேட் அக்லி கோடை விடுமுறைக்கு வரும் என கூறுகின்றனர். அந்த வகையில் கூலி மே ஒன்றாம் தேதி வெளியாகும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அஜித் பிறந்த நாளான அன்று குட் பேட் அக்லி வரவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

அப்படி பார்த்தால் இரு பெரும் நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் மோதிக்கொள்வது நிச்சயம் சுவாரஸ்யமாக தான் இருக்கிறது. இந்த செய்தி தற்போது வைரலாகி வரும் நிலையில் நல்ல வேளை கங்குவா 2 படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற ஜாலி கமெண்டுகளும் பரவி வருகிறது.

Trending News