சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

தோல்வி பட டைட்டிலை வைக்க எப்படி மனசு வந்துச்சு.. மனசாட்சி இல்லாத லோகி, கடுப்பாகும் ரஜினி வெறியர்கள்

Actor Rajini: சில தினங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டாரின் கூலி டைட்டில் டீசர் வெளியானது. அதற்காகவே காத்திருந்த ரஜினி ரசிகர்கள் அதை ஆரவாரமாக கொண்டாடினார்கள்.

அதில் இடம்பெற்று இருந்த வசனமும் அனிருத்தின் ரெட்ரோ ஸ்டைல் இசையும் ட்ரெண்டாக தொடங்கியது. அதேபோல் அந்த வீடியோ அதிக பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

ஆனால் உண்மையில் டீசர் எதிர்பார்த்ததை விட குறைவாகத்தான் இருந்தது. இதற்கு பல காரணங்களை சொல்லலாம். முதலாவதாக படத்தின் டைட்டில் ஏற்கனவே சரத்குமார் நடிப்பில் வெளியாகிவிட்டது.

ஏமாற்றிய கூலி டீசர்

பொதுவாக சூப்பர் ஸ்டாரின் பட டைட்டிலுக்கு முன்னணி ஹீரோக்கள் நீ நான் என அடித்துக் கொள்வார்கள். அப்படி இருக்கும் போது ஒரு தோல்வி பட டைட்டிலை வைக்க லோகிக்கு எப்படி மனசு வந்தது.

இரண்டாவதாக டீசர் முழுவதும் பழைய படத்தின் டயலாக் தான் இடம் பெற்றிருந்தது. சொந்தமாக அனல் பறக்கும் வசனங்களை வைக்க கூட லோகிக்கு நேரமில்லையா?

இப்படி பல கேள்விகளை ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர். மேலும் விக்ரம் பட அறிவிப்பு வெளியான போது கமல் சொல்லும் ஆரம்பிக்கலாமா என்ற வார்த்தை இன்றளவும் பிரபலமாக இருக்கிறது.

ஓரவஞ்சனை செய்த லோகேஷ்

ஆனால் ரஜினிக்கு பரீட்சையில் வரும் எதிர்ச்சொல் போல் முடிச்சுடலாமா என வைத்திருக்கிறார். இது ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மிகவும் குறைவு தான்.

இதை பட்டியல் போடும் ரசிகர்கள் மனசாட்சியே இல்லாத லோகி என திட்டி வருகின்றனர். அது மட்டுமின்றி தலைவருக்கு ஓரவஞ்சனை செய்கிறாரோ? என்ற ரீதியிலும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.

Trending News