திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அண்ணாத்த படம் நாசமாய் போனதற்கு காரணம் இவங்கதான்.. சர்ச்சையை கிளப்பி விட்ட பிரபலம்

அண்ணாத்த படத்தின் படு தோல்விக்கு மிகமுக்கியம் காரணம் ரஜினியுடைய மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா தான் என முக்கிய பிரபலம் ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டி இருக்கிறார். படத்திற்கு மிக சம்மந்தப்பட்ட ஒருவர் தன்னிடம் கூறியதாக அவர் இதை மீடியா முன் சொல்லி இருக்கிறார்.

‘அண்ணாத்த’ திரைப்படம் ரஜினி-சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான திரைப்படம். ரஜினியின் 90ஸ் ஹரோயின்களான மீனா மற்றும் குஷ்பூவின் ரீஎண்ட்ரி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என இந்த படத்திற்கு மிகப் பெரிய ஹைப் உருவாகி விட்டது. இந்த படத்தின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.

Also Read : 23 வருடங்கள் கழித்து ரஜினியுடன் இணையும் நடிகை.. சீக்ரெட்டாக வெளிவந்த ஜெயிலர் அப்டேட்

சிறுத்தை சிவா தன்னுடைய முதல் படம் சிறுத்தையை தவிர, மற்ற படங்களான வீரம், விஸ்வாசம், வேதாளம் படங்களில் பயங்கர செண்டிமெண்ட் கதைக்களத்தை வைத்தே எடுத்தார். அந்த படங்களும் அவருக்கு ஓரளவுக்கு கிளிக் ஆகியது. ஆனால் சூப்பர் ஸ்டாரின் இந்த படம் மட்டுமே சுத்தமாக ரசிகர்களிடையே எடுபடாமல் போனது.

2010 ஆம் ஆண்டு எந்திரன் திரைப்படத்திற்கு பிறகே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அந்த ஆண்டு ரஜினி கிட்டத்தட்ட 3,4 மாதங்களுக்கு மேல் அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தது அனைவரும் அறிந்ததே. அதன் பின்னர் ரஜினிகாந்த் அதிகமாக பொது நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்வதில்லை. அவ்வப்போது மருத்துவ பரிசோதனைக்கும் சென்று வருகிறார்.

Also Read : சிவகார்த்திகேயனை தவிர்த்த நெல்சன்.. ஜெயிலர் படத்தில் மிரட்ட வரும் நடிகர்

ரஜினிகாந்தின் உடல் நிலை காரணமாக அவர் எங்கு சென்றாலும், அவருடைய இரண்டு மகள்களில் ஒருவர் ரஜினியுடன் சென்று விடுகிறார்கள். இதே போன்றே படப்பிடிப்பு தளத்திற்கும் சென்று விடுவார்களாம். அண்ணாத்த திரைப்படத்தின் போது ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற ரஜினியின் மகள்கள், பட காட்சியமைப்புகளிலும் அதிகமாக தலையிட்டதாக சொல்லப்படுகிறது.

சமீப காலங்களில் ‘சவுக்கு’ சங்கர் என்ற பெயரை தெரியாதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம். இந்த சவுக்கு சங்கர் தான் இப்படி ஒரு குற்றசாட்டை ரஜினியின் மகள்கள் மீது வைத்திருக்கிறார். ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் செய்த ஒரு சில மாற்றங்கள் தான் அண்ணாத்த திரைப்படத்தின் தோல்விக்கு காரணம் என்று இவர் கூறியிருக்கிறார்.

Also Read : உலக அழகி வேண்டாம் பாகுபலி நடிகை நீங்க வாங்க.. ஜெயிலர் படத்தில் நடந்த ட்விஸ்ட்

Trending News