வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

1000 கார்ப்பரேட் மூளையை மிஞ்சிய ரஜினி.. சன் பிக்சர்ஸ் வாரித்தின்று ஏப்பம் விட்ட சூப்பர் ஸ்டார்

Rajini, Sun Pictures: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எதிர்பார்க்காத அளவு ஜெயிலர் படத்தின் வெற்றியை கொடுத்திருக்கிறார். 72 வயதில் ஒரு படத்தை தாங்கிப் பிடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வசூலை வாரி குவித்து இருக்கிறார். இந்த படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்திருந்தது.

இதற்கு முன்னதாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தையும் இந்நிறுவனம் தான் தயாரித்தது. ஆனால் அந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று ரஜினிக்கு பெயர் வாங்கிக் கொடுக்க தவறியது. இதனால் சன் பிக்சர்ஸ் தனது அடுத்த படத்திலும் ரஜினியை ஒப்பந்தம் செய்தாலும் சம்பளத்தை குறைத்தது.

Also Read : லியோவை விட பல மடங்கு பில்டப்புடன் வெளியான ரஜினியின் படம்.. கடைசியில் மண்ணை கவியது தான் மிச்சம்

அண்ணாத்த படத்திற்கு 120 கோடி கொடுத்த நிலையில் அடுத்ததாக ஜெயிலர் படத்திற்கு 30 கோடி குறைத்துக் கொண்டு வெறும் 80 கோடி சம்பளமாக கொடுத்தது. ரஜினியும் இதை பெரிதாக கருதாமல் அப்போது ஏற்றுக்கொண்டார். இப்போது ஜெயிலர் படம் இமாலய வெற்றி பெற்று ரஜினியின் மார்க்கெட் எங்கேயோ போய்விட்டது.

மேலும் ஜெயிலர் வெற்றி கொண்டாட்டத்தில் ரஜினிக்கு லாபத்தில் ஒரு பங்கு மற்றும் விலை உயர்ந்த கார் ஆகியவற்றை கலாநிதி மாறன் பரிசாக வழங்கினார். இப்போது தலைவர் 171 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தில் ரஜினி அக்ரிமெண்ட் போட்டுவிட்டு சம்பளத்தை மட்டும் சொல்லவில்லை.

Also Read : வீட்டு வாசலில் ரஜினிக்கு காத்திருந்த காஸ்ட்லி கிஃப்ட்.. சர்ப்ரைஸ் கொடுத்த கலாநிதி மாறன், தலை சுற்ற வைக்கும் விலை

ஏனென்றால் ஜெயிலர் படத்தின் வெற்றியை வைத்து தலைவர் 171 படத்தின் சம்பளத்தை தீர்மானித்து கொள்ளலாம் என ரஜினி சொல்லிவிட்டார். அப்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஜெயிலர் படம் இப்படி ஒரு வெற்றி கொடுக்கும் என்று தெரியாததால் ரஜினி பேச்சுக்கு இணங்க சம்மதம் தெரிவித்து விட்டனர்.

இப்போது இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு 250 கோடி சம்பளம் கேட்கிறாராம். கிட்டத்தட்ட 1000 கார்ப்பரேட் முதலைகளை பார்த்தவர்தான் ரஜினி. சந்தர்ப்பத்தை எப்படி சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற யுக்தியை தெரிந்து ரஜினி சன் பிக்சர்ஸ் வாரி தின்னி எப்பமிட்டு விட்டார்.

Also Read : சும்மா இருக்கும் விஜய்யை சொறிஞ்சு விடும் கலாநிதி மாறன்.. ரஜினியை வச்சு வெறுப்பேற்றிய சம்பவம்

Trending News