தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பலரும் தங்களுடைய சினிமா கேரியரில் ஒரு குறைந்தது ஒரு மோசமான தோல்வி படத்தையாவது கொடுத்திருப்பார்கள். அந்த வகையில் ரஜினிக்கு அமைந்த திரைப்படம்தான் பாபா.
2002ஆம் ஆண்டு ரஜினிகாந்த் மற்றும் மனிஷா கொய்ராலா நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் பாபா. மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த திரைப்படம்.
பாபா படத்தின் கதை மற்றும் திரைக்கதை அனைத்தையும் ரஜினிகாந்த் தான் எழுதியிருந்தார். மேலும் அந்த படத்தை சொந்தமாகவும் தயாரித்தார். அதற்கு முன்னர் வெளியான ரஜினி படத்தின் வெற்றியை வைத்து பாபா படத்தின் வியாபாரம் முடிக்கப்பட்டது.
ஆனால் பாபா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் சம்பந்தப்பட்டவர்களிடம் பாபா படத்தைப் பற்றிய விவரத்தை கேட்டு தெரிந்துகொண்டு ரஜினி செய்த செயல்தான் இன்று வரை தமிழ் சினிமாவில் அவரை சூப்பர் ஸ்டார் என கொண்டாடுவதற்கு காரணம் என தயாரிப்பாளர் ஆனந்த் L சுரேஷ் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
பாபா படத்தின் தோல்வியை விட தன் படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்காரர்கள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளானது ரஜினிகாந்துக்கு இரவு முழுவதும் தூக்கத்தை தரவில்லையாம். இதனால் சம்பந்தப்பட்ட பெரியவர்களை அழைத்து பாபா படம் எந்தெந்த இடங்களில் எவ்வளவு தோல்வி அடைந்தது என கேட்டு தெரிந்து கொண்டாராம்.
உடனே இரவோடு இரவாக அந்த லிஸ்டை ரெடி செய்து நஷ்டத்தை ஈடு கட்டாமல் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தோடு சேர்த்து தன்னுடைய சொந்த பணத்தை எடுத்து கொடுத்தாராம் ரஜினிகாந்த்.
சமீபகாலமாக சிறுபிள்ளை நடிகர்கள் இரண்டு படம் நடித்து விட்டாலே நான் தான் சூப்பர் ஸ்டார் என பீற்றிக்கொள்ளும் நிலையில் இவ்வளவு பெரிய உதவியை செய்துவிட்டு சத்தம் இல்லாமல் தன்னுடைய அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விட்டாராம் ரஜினி. அதனால்தான் இன்றுவரை தியேட்டர்காரர்கள் ரஜினி படங்களை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.