வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

எப்போதும் ஒரே குறிக்கோளுடன் இருக்கும் சூப்பர் ஸ்டார்.. ஆனாலும் நெல்சனை கைவிடாத ரஜினி

கோலமாவு கோகிலா, டாக்டர் என தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த நெல்சன் திலிப்குமார் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தின் டிரெய்லர் பாடல் வெளியாகி வேற லெவலில் ட்ரண்டாகியிருந்தது. ஆனால் இந்தப் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பே ரஜினியின் படத்தை நெல்சன் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. மேலும் இப்படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். எப்போதும் ரஜினி தன்னுடைய இயக்குனரை முந்தைய படத்தின் வெற்றியை வைத்து தேர்வு செய்வார்.

தனக்கு பல வெற்றிப்படங்கள் கொடுத்தாலும் ஒரே ஒரு தோல்வி படத்தை கொடுத்தால் அந்த இயக்குனருடன் மீண்டும் சேர்வதில் ரஜினி யோசித்துதான் முடிவு எடுப்பார். ஆனால் பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பே நெல்சனை தேர்வு செய்ததால் அவர் மீது ரஜினி நம்பிக்கை இல்லாமல் உள்ளார்.

அதனால் என்ன செய்வதென தெரியாமல் படத்தில் சில காட்சிகள் தனது தகுந்தபடி ரஜினி மாற்றியுள்ளார். மேலும் படத்தின் முழு ஸ்கிரிப்டையும் முன்கூட்டியே கேட்டுள்ளார். இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரை தலைவர் 169 படத்தில் நெல்சனுக்கு உதவி செய்யுமாறு ரஜினி நியமித்துள்ளார்.

பீஸ்ட் படம் வெளியானபோது ரஜினியின் படத்தை நெல்சன் இயக்கப் போவதில்லை என்ற தகவல்கள் இணையத்தில் வெளியானது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில் தலைவர் 169 புகைப்படத்தை வைத்திருந்தார்.

ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகு நெல்சனை தன் படத்தில் இருந்து நீக்கினால் அவருடைய திரை வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்படும் என்பதற்காக மட்டுமே நெல்சன் படத்தில் நடிக்க ரஜினி ஒப்புக் கொண்டுள்ளார். அதனால் தான் கதையில் சில மாற்றங்களையும் கூறியுள்ளார்.

Trending News