வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கொடுத்த வாக்கை காப்பாற்றாத ரஜினி.. கல்யாணம் ஆகி டைவர்ஸ்ம் ஆகிவிட்டது

ரஜினிக்கு பெரிய பக்கபலமாக இருப்பது அவருடைய ரசிகர்கள் தான். இத்தனை வருட காலமாக எத்தனையோ படங்களில் வெற்றி தோல்விகளை பார்த்தாலும் இன்றுவரை சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் நிலைத்து நிற்பதற்கு இவருடைய கோடான கோடி ரசிகர்கள் தான் காரணம். அதனாலயே அவர்களை அடிக்கடி சந்திப்பதும் படங்கள் குறித்து பேசுவதும் என்பதை வழக்கமாக வைத்திருப்பார்.

அதேபோல் இவருடைய ரசிகர்களும் இவர் படங்களில் நடித்தால் மட்டுமே போதும் எங்களுக்கு அவர்களை திரையில் பார்த்து ரசிக்க வேண்டும் அவ்வளவுதான் என்று ஏராளமான ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ரசிகர்களிடம் பல வருடங்களுக்கு முன்பு ரஜினி ஒரு வாக்கு கொடுத்திருக்கிறார். ஆனால்  அதை காப்பாற்றாமல் இப்பொழுது வரை ரஜினி இருந்து வருகிறார்.

Also read: ரஜினி போட்ட விதைதான் இப்போ நீங்க சாப்பிடுறீங்க! அஜித், விஜய்யை கொண்டாட தலைவர் போட்டு கொடுத்த ரூட்

பொதுவாக நடிகர்கள் மீது ரசிகர்கள் காட்டும் அன்பிற்கு அவர்களை மகிழ்ச்சி படுத்தும் விதமாக ஏதாவது ஒரு விதத்தில் அவர்களை குஷிப்படுத்தி வருவார்கள். அப்படித்தான் ரசிகர்களை கூப்பிட்டு அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அடிக்கடி மகிழ்வித்து வருவார்கள். அதே போல் ரஜினியும் ஐஸ்வர்யா தனுஷ் திருமணத்தின் போது ரசிகர்களிடம் உங்களை என்னால் கல்யாணத்திற்கு கூப்பிட முடியவில்லை.

ஆனால் இதற்கான பிரியாணி விருந்து கட்டாயமாக உங்களுக்கு கொடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். ஆனால் அதை இன்று வரை நிறைவேற்றாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய ரசிகர்கள் தமிழ்நாட்டில் பல பேர் இவருக்காக உயிரை விடும் அளவிற்கு கொண்டாடி வருகிறார்கள். அத்துடன் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று மற்ற நடிகர்கள் இவருடைய இடத்திற்கு போட்டி போட்டு வருகின்றனர்.

Also read: ஜெயிலரை ஒரு கை பார்த்துவிட்டு ரஜினி செய்யும் வேலை.. ஏர்போர்ட்டில் சிக்கிய சூப்பர் ஸ்டார்

ஆனால் இவருடைய ரசிகர்கள் அந்த இடத்திற்கு மிகப் பொருத்தமானவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்தான் என்று அந்த இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்று சொல்லி இவருடைய ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள். அந்த அளவிற்கு இவருடைய ரசிகர்கள் தீவிரமாக இவர் மீது அன்பை காட்டி வருகிறார்கள்.

இதற்கடுத்து இவரை ரோல் மாடலாக வைத்து இருக்கும் லிட்டில் சூப்பர் ஸ்டார் என பெயர் எடுத்த சிம்பு கூட அவருடைய ரசிகர்களை கூப்பிட்டு பிரியாணி விருந்தை கொடுத்து உங்களுடைய அன்பும் ஆதரவும் இருந்தால் எனக்கு அதுவே பெரிய வெற்றி. நீங்கள்தான் எனக்கு பக்க பலமாக இருக்கணும் என்று அவர்களிடம் பேசி வருகிறார்.

இப்படி இருக்கையில் ரஜினி ஏன் இன்னும் அவர் சொன்னது போல் அவருடைய ரசிகர்களுக்கு கல்யாண சாப்பாடு போடாமல் மறந்து விட்டார் என்பது தெரியவில்லை. ஆனால் ஐஸ்வர்யா தனுஷ் கல்யாணமும் ஆகி அது டைவர்ஸ்ம் ஆகிவிட்டது . ஆனாலும் ரஜினி சொன்ன வாக்கை காப்பாற்றுவதற்காக கூடிய விரைவில் ரசிகர்களை கூப்பிட்டு பிரியாணி விருந்து போடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: ரஜினி, கமலை ஓரங்கட்டிய நடிகர்.. ஒரு மணி நேரத்திற்கு வாங்கிய சம்பளம்

Trending News