சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

ஷங்கர் பேச்சை கேட்காமல் போன ரஜினி.. ராங் ரூட்டில் சிக்கி விழி பிதுங்கிய சம்பவம்

Rajini-Shankar: சூப்பர் ஸ்டார் எப்போதுமே தன்னுடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பார். ஆனால் அப்படிப்பட்டவரே ஒரு பிரச்சனையில் சிக்கி விழி பிதுங்கிய சம்பவமும் நடந்திருக்கிறது. அதிலும் அவர் ஷங்கர் பேச்சை கேட்காமல் போய் வம்பில் மாட்டி இருக்கிறார்.

அதாவது எந்திரன் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில் துறைமுகத்தில் ஒரு முக்கிய காட்சி எடுக்க அனைத்து வேலைகளும் தயார் நிலையில் இருந்திருக்கிறது. ஆனால் அங்கு செல்லும் வழி மிகவும் ட்ராஃபிக்காக இருக்கும் என்பதால் ஷங்கர் ரஜினியிடம் வேறு ஒரு ரூட்டை கூறி வர சொல்லி இருக்கிறார்.

Also read: ஆண்டவருக்கே விபூதி அடித்த சூப்பர் ஸ்டார்.. ஆசை காட்டி தன் பக்கம் இழுத்த சன் பிக்சர்ஸ் மாறன்

ஆனால் ரஜினியின் உதவியாளர் என்ன நினைத்தாரோ அதற்கு நேர்மாறான ஒரு பாதையை பிடித்து சென்றிருக்கிறார். அங்கு தான் பிரச்சனையே ஆரம்பித்து இருக்கிறது. அதாவது அந்த பாதையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ரஜினி கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் காருக்குள்ளேயே அவதிப்பட்டு இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் படப்பிடிப்புக்கு தாமதமானதை உணர்ந்த அவர் தன் உதவியாளரை கடுமையாக கடிந்து கொண்டாராம். அதைத்தொடர்ந்து அவர் செய்தது தான் தரமான சம்பவம். அதாவது உடனே அவர் ஒரு துண்டை எடுத்து முகம் முழுவதையும் மறைத்துக் கொண்டு காரை விட்டு இறங்கி இருக்கிறார். அப்போது போலீஸ் அதிகாரி ஒருவர் பைக்கில் வந்திருக்கிறார்.

Also read: கமல்- வாணி திருமணத்தில் மாப்பிள்ளை தோழனாக நின்ற ரஜினி.. 45 வருடத்திற்கு பின் ட்ரெண்டாகும் புகைப்படம்

அவரை நிறுத்தி தான் யார் என்ற விவரத்தை கூறி தன்னை ஷூட்டிங் ஸ்பாட்டில் இறக்கிவிட முடியுமா என்று கேட்டிருக்கிறார். ஆனால் யாரோ விளையாடுகிறார்கள் என்று அந்த போலீஸ் இதை நம்பவே இல்லையாம். அதன் பிறகு ஒரு வழியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட ரஜினி அவருடன் பயணித்திருக்கிறார். சூப்பர் ஸ்டாரே தன் வண்டியில் வரும் சந்தோஷத்தில் அந்த போலீசும் குறுக்கு வழியை எல்லாம் பிடித்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று இருக்கிறார்.

அதன் பிறகு மேக்கப் போட்டு சூட்டிங் ஆரம்பிப்பதற்கு சில மணி நேரம் ஆயிருக்கிறது. இதனால் சங்கடப்பட்டு போன ரஜினி சங்கர் முகத்தில் விழிக்கவே வெட்கப்பட்டு கொண்டாராம். இதை தெரிந்து கொண்ட இயக்குனரும் பரவாயில்லை சார் இதெல்லாம் சகஜம் தான் என்று அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்திருக்கிறார். இந்த சம்பவம் இப்போது பலருக்கும் ஆச்சரியமான தகவலாக இருக்கிறது.

Also read: தலைவர்-171 போஸ்டர் ரிலீஸால் கடும் கோபத்தில் லோகேஷ்.. நாலா பக்கமும் லாக் செய்யும் சன் பிக்சர்ஸ் மாறன்

Trending News