வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ரம்பாவிடம் அத்துமீறிய ரஜினி.. அருணாச்சலம் ஷூட்டிங்கில் நடந்தது என்ன.? பரபரக்கும் மீடியா

Rajini-Rambha: சோசியல் மீடியாக்களின் ஆதிக்கம் அதிகமாகிவிட்ட இந்த காலகட்டத்தில் ஒவ்வொன்றையும் ஜாக்கிரதையாக தான் பேச வேண்டி இருக்கிறது. அப்படித்தான் தற்போது ரஜினி பற்றிய ஒரு ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

அதன்படி ரம்பாவிடம் அத்துமீறிய ரஜினி என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் வைரல் செய்து வருகின்றனர். பரபரப்பை கிளப்பிய இந்த விவகாரத்தில் ரம்பா பேசிய பழைய வீடியோ ஒன்று அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதில் அவர் அருணாச்சலம் படப்பிடிப்பில் நடந்த சில சம்பவங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அதாவது அப்பட ஷூட்டிங்கில் இருக்கும் போது சல்மான் கான், ஜாக்கி ஷெராப் ஆகியோர் செட்டுக்கு வந்திருக்கின்றனர். அவர்கள் இருவருடனும் ஒரு படத்தில் ரம்பா நடித்துக் கொண்டிருந்ததால் அவர்களை பார்த்த சந்தோஷத்தில் ஓடிப் போய் கட்டிப்பிடித்து பேசிக் கொண்டிருந்தாராம்.

Also read: சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த சம்பள இடத்தை பிடித்த அஜித்.. நஷ்டம்னு தெரிஞ்சே தலையை விட்ட முதலாளி

அவர்கள் சென்ற பிறகு ரஜினி ரம்பாவிடம் அவர்களைப் பார்த்ததும் ஓடிப்போய் கட்டிப்பிடித்து பேசுறீங்க. ஆனா இந்த பட செட்டுக்கு வரும்போது மட்டும் சைலன்ட்டா இருக்கீங்க. நார்த் ஹீரோக்களை விட நாங்க என்ன கேவலமா போயிட்டோமா என்று கிண்டலாக கேட்டாராம்.

அதேபோல் ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் லைட் ஆப் செய்த சமயத்தில் ரம்பாவை யாரோ தோளில் தட்டி இருக்கின்றனர். அதன் பிறகு லைட் ஆன் செய்ததும் யார் இப்படி செய்தீர்கள் என்று ஒரே பிரச்சினையாக இருந்ததாம். அப்புறம் தான் தெரிந்தது ரஜினி சார் தான் இப்படி விளையாடினார் என ரம்பா கூறியிருக்கிறார்.

அந்த ஒரு விஷயம் தான் இப்போது இவ்வளவு சர்ச்சைக்கும் காரணமாகி இருக்கிறது. அதை பார்த்த நெட்டிசன்கள் ரஜினி இவ்வளவு கேவலமாக இருக்கிறார். இவர்தான் உங்க தலைவரா என கமெண்ட் கொடுத்து வருகின்றனர். உண்மையில் இது சும்மா ஜாலிக்கு என ரம்பா கூறி இருந்தாலும் ரஜினியின் எதிர்ப்பாளர்கள் அதை தவறாக சித்தரித்து வருகின்றனர்.

Also read: ஒரே ஒரு படத்தில் ரஜினிக்கு தம்பியாக நடித்த விஜயகாந்த்.. நண்பனுக்காக சூப்பர் ஸ்டாருடன் நடிக்க மறுத்த கேப்டன்

Trending News