புதன்கிழமை, ஜனவரி 15, 2025

உங்க கடைசி மூச்சு என் வீட்ல தான் போகணும்.. யாரும் யோசிக்காததை செய்து காட்டிய ரஜினி

ரஜினி ஆரம்ப காலத்தில் சினிமாவில் நுழைந்தபோது இவருக்கு முதலில் கிடைத்த வாய்ப்பு வில்லன் மற்றும் குணச்சித்திர கேரக்டர் தான். இவர் நடிக்க வந்தபோது ஒரு பைக் மற்றும் வீடு சம்பாதிக்கிற அளவுக்கு பணம் கிடைத்தால் போதும் என்று நினைத்திருக்கிறார். அதற்காகவே எந்த ஒரு சின்ன கேரக்டராக இருந்தாலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

அப்படித்தான் சில படங்களில் வில்லன் கேரக்டரில் தொடர்ந்து நடித்து வந்திருக்கிறார். அதனாலயே இவர் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை இவருக்கு வந்ததே இல்லை. இந்த மனநிலையில் இருந்த பொழுது தயாரிப்பாளர் கலைஞானம் இவரை திடீரென்று கூப்பிட்டு பைரவி படத்தில் ஹீரோவாக நீ தான் நடிக்க வேண்டும் என்று கூறுகிறார். இதை கேட்ட ரஜினி மிகவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

Also read: விஜய் பத்தாது என்று சூப்பர் ஸ்டார் ரேஸுக்கு வந்த அடுத்த நடிகர்.. ரஜினிக்கு வந்த பெரிய சோதனை

அப்படி நடித்த படம் தான் பைரவி. இந்த படம் ரஜினிக்கு ஹீரோவாக ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன் பின் ரஜினி தொடர்ந்து படங்களில் நடிகராக நடித்து இப்பொழுது ஒரு சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கிறார் என்றால் அதற்கு இவரும் ஒரு காரணம். இந்நிலையில் இவர் கலைஞானிடம் மறுபடியும் இணைந்து பணியாற்ற முடியவில்லை என்று அதிகமாக வருத்தத்தில் இருந்திருக்கிறார்.

மேலும் அந்த தயாரிப்பாளர் வாடகை வீட்டில் வசித்து மிகவும் கஷ்டப்பட்டு இருந்திருக்கிறார் என்று தெரிந்த அமைச்சர் அவருக்கு அரசாங்க உதவியுடன் ஒரு வீடு வாங்கி கொடுக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதை கேள்விப்பட்டதும் ரஜினி, அமைச்சர் அப்படி சொன்னது மிகவும் சந்தோஷம் எனக்கு. ஆனா அந்த வேலையை நான் அவருக்கு கொடுக்க மாட்டேன்.

Also read: ரஜினிக்கு ஜோடியாக நடித்ததால் சினிமா கேரியரை தொலைத்தேன்.. நடிகையின் பரிதாப நிலைமை

நான் வீடு வாங்கிக் கொடுக்கிறேன் அந்த வீட்டில் தான் அவருடைய கடைசி மூச்சு போகணும் என்று மிகவும் நன்றி கடனுடன் கூறி இருக்கிறார். அத்துடன் ரஜினி சொன்ன மாதிரி வாக்குறுதியை நிறைவேற்றி அவருக்கு மூன்று அறைகள் வைத்து ஒரு வீடு வாங்கி கொடுத்து அந்த வீட்டிற்கு கிரகப்பிரவேசத்திற்கும் போயி தயாரிப்பாளரை நெகிழ வைத்து இருக்கிறார்.

அத்துடன் ரஜினி, பூஜை அறையில் குத்து விளக்கேற்றி, பாபா படம் ஒன்றையும் தயாரிப்பாளருக்கு பரிசளித்திருக்கிறார். அடுத்ததாக ரஜினி சொன்ன வார்த்தையை நிறைவேற்றி விட்டதாக மிகவும் உருக்கத்துடன் தயாரிப்பாளர் அவருடைய நன்றியை தெரிவித்திருக்கிறார்.

Also read: தமிழ் நடிகைகளை கொண்டாடாத சினிமா.. ராதிகாவின் மூக்கை உடைக்க தலைவர் கொடுத்த மாஸ் என்ட்ரி

Trending News