வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஊருக்கு தான் துறவி வேஷம் போடும் ரஜினி.. கலாநிதி மாறனால் அல்லோல்படும் லைக்கா

Superstar Rajinikanth: இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்துக்கு பின்னர் சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த் கிட்டத்தட்ட தொடர்ந்து இரண்டு படங்களில் கமிட்டாகியுள்ளார். இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள தலைவர் 171 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமும், இயக்குனர் ஞானவேல் இயக்கவுள்ள தலைவர் 170 படத்தை லைக்கா நிறுவனமும் தயாரிக்க உள்ளனர்.

மேலும் இப்படங்களுக்காக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 100 கோடி சம்பளம், படம் ரிலீஸானவுடம் லாபத்தில் சில சதவிகித பங்கு என மொத்தம் ஒரு படத்துக்கு 220 கோடி வரை சம்பளமாக பெறவுள்ளார். இந்த பழக்கம் ஜெயிலர் படத்திற்கு பின்னர் தான் ரஜினி இப்படி மாறியுள்ளார். காரணம் ஜெயிலர் படம் வெற்றியானவுடன் ரஜினியின் போயஸ் கார்டன் வீடுவரை சென்று 110 கோடி ரூபாய் அளவிலான காசோலையையும், 1.50 கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு காரையும் கலாநிதிமாறன் வழங்கினார்.

Also Read: சஞ்சயை வைத்து அப்பனுக்கு பாடம் சொல்லும் சங்கீதா.. லதா ரஜினிகாந்த் போல் காட்டும் புத்திசாலித்தனம்

ஜெயிலர் படத்துக்காக 120 கோடி மட்டும் ரஜினிக்கு கலாநிதிமாறன் சம்பளமாக கொடுத்த நிலையில், இப்படம் 650 கோடி வசூலானதால் சந்தோஷத்தில் வாரி, வாரி வழங்கினார். இதனால் தனது அடுத்தடுத்த படங்களில் ரஜினி சம்பளம் மட்டுமில்லாமல், லாபத்தில் பங்கையும் கேட்டு வருகிறார். இந்த பழக்கம் இவர் ஜெயிலர் படத்துக்கு முன்பாகவே நடித்து முடித்த லால் ஸலாம் படத்திலும் தொடங்கியுள்ளது.

ரஜினிகாந்தின் மூத்த மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இயக்கியுள்ள லால் ஸலாம் படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் கிரிக்கெட் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. மேலும் இப்படத்தில் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். லைக்கா தயாரித்த இப்படம் அடுத்தாண்டு வெளியாக உள்ள நிலையில், ரஜினி இப்படத்தில் நடிக்கும்போது 20 கோடி வரை குறைவான சம்பளமே கேட்டுள்ளார்.

Also Read: நெல்சனை சுற்றலில் விட்ட ரஜினிகாந்த்.. இதுவரை யாரும் பார்க்காத சூப்பர் ஸ்டாரின் மறுபக்கம்

இதற்கு காரணம், தனது மகள் எடுக்கும் படம், மற்றொன்று இப்படத்தின் மொத்த பட்ஜெட்டும் 25 கோடி மட்டுமே என்பதால் ரஜினி குறைவான சம்பளத்தில் நடித்துக்கொடுத்தார். ஆனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 25 கோடி பட்ஜெட்டை படம் எடுக்கும்போது 50 கோடியாக உயர்த்திவிட்டார். இதன் காரணமாக ரஜினியும் தனக்கு சம்பளம் வேண்டாம், படம் ரிலீஸானவுடன் லாபத்தில் 40 சதவிகிதம் கொடுக்குமாறு லைக்காவிடம் கேட்டுள்ளார்.

அதற்கு லைக்கா நிறுவனமும் சரி என்று கூறிய நிலையில், தற்போது மீண்டும் வெற்றியில் லாபம் கேட்டால் சரிவராது என யோசித்து தனக்கு சம்பளத்தையே கொடுத்துவிடுங்கள் என ரஜினி கூறியுள்ளார். எவ்வளவு சம்பளம் வேண்டுமென லைக்கா கேட்ட நிலையில், 40 கோடி என சொன்னதும் லைக்கா நிறுவனம் தற்போது அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாமல் திணறும் லைக்கா, இதற்கெல்லாம் காரணம் கலாநிதிமாறன் போட்ட விதை தான் என கூறி தற்போது அவதிப்பட்டு வருகின்றனர்.

Also Read: ஒரே நாளில் 3 படங்களில் நடித்து ரஜினி வாங்கிய முதல் சொத்து.. குட்டிச்சுவரில் பாட்டிலும், கையுமாய் நின்ற ரஜினிகாந்த்

Trending News