திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பறக்கும் கம்பளத்தை கிழித்தெறிஞ்ச ரஜினி.. நிலவில் தூக்கி வைத்த சூப்பர் ஸ்டாரின் தரமற்ற வேலைகள்

Actor Rajini: ரஜினி தன்னுடைய 72 வயதிலும் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய ரசிகர்களும் ஒரு போதும் இவரை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று இவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள். அதை காட்டும் விதமாக ஜெயிலர் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் அளவிலும் ஜெயித்து விட்டது.

இதனால் இப்பொழுது வரை ரஜினியை பறக்கும் கம்பளத்தில் மேலே வைத்து அழகு பார்த்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் என் தலைவர் படம் நடிக்கிறாரோ இல்லையோ, அவருடைய சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்று பலரும் பல போராட்டங்களை செய்து வருகிறார்கள்.

Also read: 72 வயதிலும் ரஜினிக்கு போட்டி போட்டு வரும் டாப் இயக்குனர்கள்.. ஷங்கரின் மூளையை திசை திருப்பிய ஜெயிலர் வெற்றி

இப்படி ரஜினிக்கு இருக்கும் ரசிகர்கள் அவர் மீது எக்கச்சக்க அன்பை வைத்து வருகின்றனர். ஆனால் இவரோ தற்போது தரமற்ற வேலைகளை நிறைய செய்து வருகிறார். முக்கியமாக இவர் சினிமாவையும் தாண்டி சில விஷயங்கள் செய்வது பலருக்கும் மட்டுமல்லாமல் இவருடைய ரசிகர்களாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இது இவருடைய தனிப்பட்ட விருப்பமும், கருத்துமாக கூட இருக்கலாம், ஆனால் மக்கள் கொண்டாடப்படும் ஒருவர் இப்படி செய்வது மிகப்பெரிய தவறுதான் என்று பலரும் இவரைப் பற்றி பேசிக் கொண்டு வருகிறார்கள். இது சம்பந்தமான வீடியோக்கள் புகைப்படங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

Also read: தலைவர் 171ல் கண்டிப்பாக இந்த 4 நடிகர்களும் இருக்க வேண்டும்.. சும்மாவே ஆடும் லோகேஷுக்கு சலங்கை கட்டிவிட்ட ரஜினி

இதைப் பற்றி இவரிடம் கேட்டதற்கு அவர் பக்கத்தில் இருந்து பல விளக்கங்களை அளித்திருக்கிறார். ஆனாலும் கடவுளாக கொண்டாடப்படும் சூப்பர் ஸ்டார் இந்த மாதிரி விஷயங்களை செய்கிறார் என்றால் கொஞ்சம் ஆச்சரியமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. அதாவது யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது.

மேலும் ராஜா பாய் என்னும் ரகுராஜ் பிரதாப் சிங்க் இவர் உத்திரபிரதேசம் மாநிலத்தில் எம் எல் ஏ. இவர் மீது நிறைய கொலை வழக்குகள் இருக்கிறது. ஒரு ஐபிஎஸ் ஆபீசரை கொன்றார் என்று கூட இவர் மீது புகார் இருக்கிறது. இந்த சமயத்தில் இவரை போய் நேரில் சந்தித்து பேசி வருகிறார் ரஜினி. இது போன்ற விஷயங்கள் தற்போது ரஜினி செய்வதால் கொஞ்சம் கொஞ்சமாக இவருடைய மதிப்பு கீழே இறங்கி வருகிறது.

Also read: ரஜினி அரசியலை வெறுத்ததற்கு இப்படி ஒரு காரணமா.? ஆன மண்ட மேல இருந்த கொண்டையை மறந்துட்டீங்க!

Trending News