வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

உஷாரா எஸ்கேப் ஆன ரஜினி.. மகளையே தள்ளி வைத்த தலைவர்

Super Star Rajini: 72 வயதானாலும் எனர்ஜி குறையாமல் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த், இப்போது ஒவ்வொரு விஷயத்திலும் உஷாராக நடந்து கொள்கிறார். ஜெயிலர் படத்திற்குப் பிறகு டிஜே ஞானவேல் இயக்கத்தில் அடுத்து தலைவர் 170 படத்தில் நடிக்க தயாராகிறார்.

இந்த படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க போகிறார். இன்னும் சில படங்கள் மட்டுமே நடித்து முடித்துவிட்டு சினிமாவில் ஓய்வு பெற வேண்டும் என்ற முடிவில் சூப்பர் ஸ்டார் இருக்கிறார். இதற்கிடையில் சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா தயாரித்திருக்கும் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியானது. இதில் கதாநாயகன்கள் ஆன விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த்தை விட ரஜினி தான் மாஸ் என்ட்ரி கொடுத்தார். சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் லால் சலாம் படத்தை பார்ப்பதற்கு ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

Also Read: போட்டி இல்ல போர், விளையாட்டுல மதத்தை கலந்து இருக்கீங்க.. தீபாவளி ஸ்பெஷலாக வெளியான லால் சலாம் டீசர்

உஷாரா எஸ்கேப் ஆன சூப்பர் ஸ்டார்

இதெல்லாம் தெரிஞ்சுதான் ரஜினி, இப்போது உஷாராக நடந்து கொண்டிருக்கிறார். லால் சலாம் படத்தின் ஆடியோ லான்ச் நடக்கப் போகிறது, இதற்கு ரஜினி வர மறுத்துவிட்டார். இது என்னுடைய படம் இல்லை, நான் வெறும் கெஸ்ட் ரோல் தான் பண்றேன் என்று சொல்லிவிட்டார்.

அவருடைய மகள் எவ்வளவோ பேசிப் பார்த்தாலும் வர முடியாது என உறுதியுடன் இருக்கிறார். இதற்கெல்லாம் காரணம், எதற்கு அங்கு வந்து ஏதாவது ஒன்னு பேசி, அது பிரச்சினையாகும். வம்பை இழுத்து வழியில் போடக்கூடாது என்று மகளையே இந்த விஷயத்தில் தள்ளி வைத்திருக்கிறார் தலைவர்.

அது மட்டுமல்ல விநியோகஸ்தர்களிடமும் லால் சலாம் படம், ரஜினியின் படம் என்று ஏமாந்து பிசினஸ் பண்ண வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். இவ்வளவு உஷாராக இருக்கும் அப்பாவை பார்த்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரக்தியின் உச்சித்துக்கே சென்று விட்டார்.

Also Read: பத்து வருஷத்திற்கு படங்களை புக் செய்த ரஜினி.. 83 வயசு வரைக்கும் பிசி தான்

- Advertisement -spot_img

Trending News