வெள்ளிக்கிழமை, டிசம்பர் 20, 2024

திருமணத்திற்கு முன்பே இரண்டு நடிகைகளை காதலித்த ரஜினிகாந்த்.. இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை!

கடந்த சில மாதங்களாகவே ரஜினிகாந்த் பற்றி ஒரு காலத்தில் பத்திரிகைகளில் எழுதப்பட்ட செய்திகள் அனைத்தும் தோண்டி எடுக்கப்பட்டு பேசப்பட்டு வருகிறது. அந்தவகையில் அவர் அப்போது பீடா சாப்பிட்டது, சரக்கு அடித்தது என ரஜினியின் பெயரை கெடுக்க பல வேலைகள் நடந்து வருகிறது.

இது ஏன் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம். அப்படி ரஜினியின் சில ரகசியங்களில் காதல் சர்ச்சைகளும் உள்ளது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. ரஜினி, லதா என்ற பத்திரிக்கையாளரை திருமணம் செய்து கொண்டார் என்பது மட்டும்தான் தெரியும்.

ஆனால் அதற்கு முன்பே இரண்டு பேரை காதலித்துள்ளாராம். நடிகை ஸ்ரீதேவியுடன் கிசுகிசுக்கப்படாத முன்னணி நடிகர்களே கிடையாது. அவர் எந்த மொழியில் எந்த முன்னணி நடிகருடன் நடித்தாலும் அவரை காதலிக்கிறார் என ஒரு சர்ச்சையைக் கிளப்பி விடுவார்கள்.

rajini-sridevi-cinemapettai
rajini-sridevi-cinemapettai

ஆனால் உண்மையில் ரஜினி மற்றும் ஸ்ரீதேவி இருவரும் காதலித்து வந்ததாகவும், தன்னுடைய மகள் சினிமாவில் இன்னும் பெரிய உயரத்தை தொட வேண்டும் என அந்த காதலுக்கு ஸ்ரீதேவியின் தாயார் முற்றுப்புள்ளி வைத்ததாகவும் ஒரு செய்தி உள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் ஜோடியாகவும் பிரபல நடிகையாகவும் வலம் வந்த லதா என்பவரையும் ரஜினிகாந்த் காதலித்ததாக அன்றைய பத்திரிகைகளில் எழுதப்பட்டது. மேலும் இவர்களது காதல் விவகாரம் தெரிந்து எம்ஜிஆர் கோபப்பட்டதாகவும், பெங்களூரு சென்று ரகசிய திருமணம் செய்ய இருந்தவர்களை அந்த மாநில முதல் அமைச்சரிடம் பேசி அந்த காதலை பிரித்து விட்டதாகவும் எம்ஜிஆர் மீது அப்போதே பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

rajini-latha-cinemapettai
rajini-latha-cinemapettai

சினிமாவில் வெற்றியைப் பெற்ற அளவுக்கு அவரால் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் அதிலும் காதலில் பெரிய அளவு வெற்றியை பெறமுடியவில்லை. இந்நிலையில்தான் லதா என்ற பெயருடன் தன்னை பேட்டியெடுக்க வந்தவரை திருமணம் செய்து கொண்டார்.

Trending News