பெரிய பட்ஜெட் தமிழ் படங்கள் தயாரிப்பதில் எப்பொழுதுமே முதல் ஆளாக இருப்பவர்கள் லைக்கா நிறுவனம் தான். யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் இப்பொழுது அந்த நிறுவனத்திற்கும் நிதி பற்றாக்குறை ஏற்பட்டு தவித்து வருகிறது. இதனால் பட வேலைகள் எல்லாம் பாதியில் கிடைக்கிறது.
பெரிய ஹீரோக்கள் படமாகிய அஜித்தின் விடாமுயற்சி. கமலின் இந்தியன் 2. ரஜினியின் வேட்டையன் போன்ற படங்களை தயாரித்து வருகிறது. இப்பொழுது இந்த படங்களுக்கு ஒரே சமயத்தில் நிதி திரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த படங்களின் சூட்டிங் சொன்ன நேரத்திற்கு நடக்காமல் வீணாகிறது. நடிகர்கள் கால் சீட் கொடுத்தும் பண பற்றாக்குறையால் பல பிரச்சனைகள் வந்த வண்ணம் இருக்கிறது. இதனால் அஜித் அடுத்த படத்திற்கு சென்றுவிட்டார்.
விடாமுயற்சியை விட்டுவிட்டு அஜித் ஹைதராபாத்தில் குட் பேட் அக்லி படத்தின் முதல் நாள் பூஜைக்கு சென்று விட்டார். லைக்கா பணம் ரெடி பண்ணிய பிறகு தான் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் வருவேன் என்றும் காரராக சொல்லிவிட்டாராம் அஜித்.
இதே நிலைமைதான் ரஜினியின் வேட்டையின் படத்திற்கும் வந்துள்ளது. அவர் அந்த படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜன் கூலி படத்தில் நடிக்க இருக்கிறார். இதனால் அவருக்கும் கால்ஷீட் பிரச்சினை வந்துள்ளது. நீங்கள் படத்தை முடிக்காவிட்டால் ஜூன் மாதம் கூலி படத்திற்கு சென்று விடுவேன் என ஏற்கனவே ரஜினி வார்னிங் கொடுத்துள்ளார்
ரஜினிகாந்த் லைக்கா நிறுவனத்தை அழைத்து என் 39 வருட சினிமா கேரியரில் நான் நடித்த படங்களில் இந்த மாதிரி ஒரு முறை கூட பிரச்சனை வந்ததில்லை. உங்கள் படத்தில் தான் இந்த கஷ்டம் எனக்கு வந்து இருக்கிறது என திட்டியுள்ளார். இதனால் அவசரமாக ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்து படத்தை முடித்து விட்டார்களாம். நேற்றோடு வேட்டையுடன் சூட்டிங் நிறைவு பெற்றதாம்.