புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வருஷா வருஷம் இப்படி கிளம்புறாங்க.. சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் வீட்டு வாசலில் செய்த அலப்பறை

சூப்பர்ஸ்டார் இன்று அவர் தனது 74-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என்று அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பொதுவாகவே தலைவர் தரிசனத்துக்காக அவர் வீட்டு வாசலில் ஏராளாமான ரசிகர்கள் தினமும் நிற்பார்கள். அது சமீப காலமாக கொஞ்சம் குறைந்துள்ளது.

ஆனால் இன்று அவர் வீட்டு வாசலில் ரசிகர் பட்டாளமே வந்து நின்றது. ஒவ்வொரு வருடமும், அவர் வீட்டு வாசலில் பிறந்தநாள் அன்று ரசிகர்கள் செய்யும் அலப்பறை ஏராளம். பாவம் தலைவர்! தலையில் அடித்துக்கொள்ளாத குறை தான். கடந்த வருடம்.. ‘தலைவா இப்போ வெளில வரியா இல்லையா’ என்று கண்ணீர் மல்க ஒரு ரசிகர் நின்றது வைரலானது

வருஷா வருஷம் இப்படி கிளம்புறாங்க..

இந்த நிலையில், இந்த வருடமும் அப்படி ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. சூப்பர்ஸ்டார் சென்னையிலே இல்லை. அவர் ஜெய்ப்பூரில் படப்பிடிப்பில் உள்ளார். இது தெரியாமல், இந்த அடைமழையிலும் ஒரு சிலர் அவர் வீட்டு வாசலில் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

போதாக்குறைக்கு, அவர் ஸ்டைலில் அவரை போல் அங்கேயே நடித்து காட்டியுள்ளார்கள். மேலும் அவர் போஸ்டருக்கு முத்தம் கொடுத்துள்ளனர் சிலர்.

இதை பார்க்கும்போது சிரிப்பு வந்தாலும், அவர் மீது எவ்வளவு அன்பை வைத்துள்ளார்கள் என்றும் உணர்த்தும் விதமாக உள்ளது.

இதை தவிர, அவரது புகைப்படங்கள் இருக்கும் அடுத்த ஆண்டுக்கான காலெண்டர்-களை வெளியிடுகிறார்கள். இப்படியான செயல்பாடுகள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது..

இதை தொடர்ந்து, பலர் இதை கேலி செய்தும் விமர்சித்தும் வருகின்றனர். “அவர்கள் நடிகர்கள்.. மற்ற படி நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் தான். அவர்கள் நடிப்பை பாராட்டலாம்.. கொண்டாடலாம். தப்பு இல்லை.. ஆனால் இப்படி செய்வது எல்லாம் ரொம்ப ஓவராக உள்ளது ” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News