திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஜெயிலர் படத்தின் இந்த கேரக்டர் விஜய்க்காக வைக்கப்பட்டதா.. இருந்தாலும் கொஞ்சம் எல்லை மீறி தான் போறீங்க

Rajinikanth – Vijay: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த பத்தாம் தேதி ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் சூப்பர் ஹிட் அடித்து கொண்டிருக்கிறது. ரஜினி ரசிகர்கள் தற்போது இயக்குனர் நெல்சனை தலையை தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். நாளுக்கு நாள் படத்தின் பாசிட்டிவ் விமர்சனங்கள் அதிகமாகி கொண்டே இருப்பதால், இந்த படம் வசூலில் ரெக்கார்ட் பிரேக் அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய் மற்றும் ரஜினிகாந்தின் ஃபேன்ஸ்களுக்கிடையே நடந்து கொண்டிருக்கும் போராட்டம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இருவருமே இதை கண்டு கொள்ளாத போதும், அவர்களுடைய ரசிகர்கள் தங்களால் முடிந்தவரை சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஜெயிலர் ரிலீசான தியேட்டர் ஒன்று சூப்பர் ஸ்டார் விஜய் என கோஷமிட்டு, விஜய் ரசிகர் ஒருவர் ரஜினி ஃபேன்ஸ்களிடம் பயங்கரமாக வாங்கி கட்டிக் கொண்டார்.

Also Read:அட்லியால் முடியாததை சாதித்த வெங்கட் பிரபு.. தளபதி 68-ல் இணையும் நடிப்பு அரக்கி

இப்படி படம் ரிலீஸ் ஆனதிலிருந்து விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் கடுமையாக மோதிக் கொண்டிருக்கும் நேரத்தில், தற்போது சமூக வலைத்தளங்களில் எல்லை மீறி சண்டையிட்டுக் கொள்கின்றனர். ஜெயிலர் படத்தின் ஒரு கேரக்டரை, விஜய் உடன் ஒப்பிட்டு ரஜினி ரசிகர்கள் போட்ட மீம்ஸ் தற்போது விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கோபத்தை உண்டாக்கி, கமெண்ட்களில் ஒருவரை ஒருவர் தாக்கி வருகிறார்கள்.

ஜெயிலர் படத்தில் நெல்சன் ஒரு வித்தியாசமான முயற்சியாக தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோரின் நடிக்க வைத்ததோடு பாலிவுட் முன்னணி நடிகர் ஜாக்கி ஷெராஃபையும் கமிட் செய்திருக்கிறார். அதே நேரத்தில் தெலுங்கு ஆடியன்ஸ்களுக்காக நடிகர் சுனிலையும் இந்த படத்தில் ஒரு காமெடியான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தார். இந்த கதாபாத்திரம் தான் தற்போது சோசியல் மீடியாவே பற்றி எறிய காரணமாக அமைந்துவிட்டது.

                                     பிளாஸ்ட் மோகன் கேரக்டரை விஜய்யுடன் ஒப்பிட்டு கலாய்த்து வருகிறார்கள்.

Jailer
Jailer

Also Read:லண்டன்னு சொல்லிட்டு நார்வே போன விஜய்.. மொத்த நெருப்பையும் கொளுத்தி போட்டு குளிர் காயும் நம்பர் நடிகை

இந்த படத்தில் சுனிலுக்கு பிளாஸ்ட் மோகன் என்னும் கேரக்டர் கொடுக்கப்பட்டிருந்தது. காமெடியான இந்த கதாபாத்திரம் எப்படியாவது சினிமாவில் நடித்து விட வேண்டும், தமன்னாவுடன் டான்ஸ் ஆட வேண்டும், சினிமாவில் பெரிய சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்ற குறிக்கோளை வைத்திருக்கும். மேலும் சுனிலும் இந்த கேரக்டருக்காக தலையில் விக்கும் வைத்திருந்தார். இதனால் தற்போது இந்த கேரக்டரை விஜய்யுடன் ஒப்பிட்டு கலாய்த்து வருகிறார்கள்.

சம்பந்தப்பட்ட நடிகர்கள் இருவருமே இதைப்பற்றி வாயை திறக்காமல் இருப்பதால் இந்த சண்டை சோசியல் மீடியாவில் தொடங்கி, தியேட்டர் வரை அக்கப்போராக மாறிவிட்டது. விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இருவருமே தாங்களாக முன்வந்து ரசிகர்களிடம் பேசாத வரை இந்த பிரச்சனை ஓயாது.

Also Read:ஜெயிலரை பார்த்தபின் நெல்சனுக்கு போன் போட்ட விஜய்.. என்ன சொன்னார் தெரியுமா.?

Trending News