கடந்த 40 வருடமாக தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ரஜினி தான் சமீப காலமாக உடல்நிலை சரி இல்லாமல் தவித்து வருகிறார். அதிலும் அவர் கடைசியாக நடித்துக் கொண்டிருக்கும் அண்ணாத்த படம் அவரை மிகவும் சோதித்துக் கொண்டிருக்கிறது.
முதலில் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்து பின்னர் உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தால் அரசியல் முடிவை மாற்றி விட்டார். இதுவே ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. இருந்தாலும் ரஜினி உடல் நிலை கருதி ரசிகர்கள் அதை பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் சிலருக்கு கொராணா ஏற்பட்ட காரணத்தால் அந்த படப்பிடிப்பு பாதியில் கைவிடப்பட்டது. பின்னர் மீண்டும் தொடங்குவதற்கான அறிகுறிகள் தற்போது வரை தெரியவில்லை. இதனால் ரஜினி மிகவும் மனச் சோர்வுடன் இருப்பதாக அவரது நண்பர் வட்டாரங்களிலிருந்து செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
மேலும் ரஜினி சமீபகாலமாக தன்னுடைய வருங்காலத்தை எண்ணி மிகவும் வருத்தப்பட்டு நண்பர்களிடம் உருக்கமாகப் பேசி வருகிறாராம். அதில், என் வாழ்நாளில் நான் நடிக்கும் கடைசி படமாக அண்ணாத்த படம் இருந்து விடுமோ என தனது உடல்நிலை கருதி பேசினாராம் ரஜனி.
அதுமட்டுமில்லாமல் நான் மீண்டும் சுறுசுறுப்பாக மாறி மேலும் சில படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தாராம். கண்டிப்பாக அண்ணாத்த படம் முடிந்த பிறகு தன்னுடைய வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடிப்பேன் என தன்னுடைய நண்பர்கள் வட்டாரத்தில் உறுதி கொடுத்துள்ளார் ரஜினி.
மேலும் அவரது நண்பர்கள் ரஜினி இப்படி கவலைப்பட்டு பேசி பார்த்ததே இல்லை என கூறுகின்றனர். விரைவில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகளை தொடங்கலாம் எனவும், வீட்டுகுள்ளேயே என்னால் காலத்தை கழிக்க முடியாது என ரஜினி சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு உறுதி கொடுத்துள்ளதாக தெரிகிறது.