வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

தளபதி 65 படத்தில் கமிட்டான ரஜினி பட முரட்டு வில்லன்.. எதிர்பார்ப்பை எகிறவிடும் அப்டேட்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு  படத்தையும் தளபதி ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை புரிந்ததோடு, விஜய்க்கு பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தி என்ற பெயரையும் பெற்றுத்தந்தது.

ஆனால் கடந்த டிசம்பர் மாதமே தளபதி நடிக்க உள்ள அடுத்த படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி, தளபதி வெறியர்களை குஷி ஆக்கியது.

அதாவது தளபதி அடுத்ததாக நடிக்க உள்ள அவரது 65வது படத்தை ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கி புகழ்பெற்ற நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். அதேபோல் இந்தப் படத்தை அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

ஏற்கனவே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏகபோகமாக உள்ள நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடித்த நடிகர் தளபதி 65 படத்தில் இணைய உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

thalapathy65-vijay-cinemapettai
thalapathy65-vijay-cinemapettai

அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி, சூப்பர் ஸ்டாரை வேற ஆங்கிளில் காட்டிய படம் தான் ‘பேட்ட’. இந்தப் படத்தில் வில்லனாக நடித்தவர் தான் நவாசுதீன் சித்திக்.

தற்போது நவாசுதீன் சித்திக் ‘தளபதி 65’ படத்திலும் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளிவருமாம்.

எனவே, இந்த தகவலை அறிந்த தளபதி ரசிகர்கள் தளபதி 65 படத்தின் மீது உள்ள ஆர்வம் அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Trending News