வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ரஜினியின் அந்த படத்துக்கு ‘A’ சர்டிபிகேட் கொடுத்திருக்கணும்.. தனிமனித ஒழுக்கம் இல்ல, காண்டான எஸ்வி சேகர்!

கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்ற கௌரவத்துடன் 80-களில் இருந்து இப்போது வரை டாப் ஹீரோவாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஒரு சூப்பர் ஹிட் படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்திருக்க வேண்டும். சென்சார் போர்டு சரியாக செயல்படவில்லை அங்கேயும் சில ஊழல்கள் நடக்கிறது என எஸ் வி சேகர் கூறியிருக்கிறார்.

எடுத்துக்காட்டாக பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான கபாலி பல வன்முறைகள் கொண்ட படம். அது உலகம் முழுக்க ஏ சர்டிபிகேட் வழங்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் யூ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் ஒரு ஊழல். அதன் தொடர்ச்சியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படமும் பயங்கர வைலன்ஸ் படம். அந்தப் படத்திற்கும் எப்படி ஏ சர்டிபிகேட் கொடுக்காமல் போனார்கள் என்று தெரியவில்லை.

Also Read: ஜோசப் விஜய் யாருன்னு பதிலடி கொடுத்த எஸ்வி சேகர்.. என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு!

அதுமட்டுமல்ல 2021 ஆம் ஆண்டு சூர்யா தயாரித்து நடித்த ஜெய் பீம் படமும் உண்மைக்கு புறம்பாக எடுக்கப்பட்டது, அந்த படத்தையும் எப்படி அனுமதித்தது. இதனால் தனிமனித ஒழுக்கம் வேண்டும், சென்சார் போர்டு இது மாதிரியான படத்தை தேர்ந்தெடுக்க கூடாது. கம்ப்யூட்டர் மூலம் படங்களை தேர்வு செய்தால் இந்த ஊழல் ஒழியும் என்று எஸ் வி சேகர் கூறியிருக்கிறார்.

70-களில் இயக்குனராகவும் நடிகராகவும் தன்னுடைய படங்களில் நகைச்சுவைக்காக அறியப்பட்டாலும், அவற்றில் தொனிக்கும் நெருடலான இரட்டை அர்த்தங்களுக்காக விமர்சிக்கப்பட்டவர் எஸ் வி சேகர். சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்ட இவர், பல ஆண்டுகளாக இருந்த கட்சியின் செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கியுள்ளார்.

Also Read: கபாலி பிளாப்ன்னு யாரு சொன்னது? 6 நாட்களில் இத்தனை கோடி வசூலா, அவிழ்த்து விட்ட தயாரிப்பாளர்

குறிப்பாக பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவாக கருத்து பதிவிட்ட விவகாரத்தில் எஸ் வி சேகர் மீது காட்டமான விமர்சனங்கள் வந்தது. இருப்பினும் கடைசி வரை கைது செய்யப்படவில்லை என்றாலும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதாக கூறிய பின்னரே அவர் குறித்த பரபரப்பு சற்று ஓய்ந்தது. இதுவும் நடிகர் எஸ் வி சேகர் அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

இப்போது சினிமாவிலும் அரசியலையும் விட்டு ஒதுங்கி இருக்கும் எஸ் வி சேகர் கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவை பரபரப்பாக்கும் ஒரு சில பேட்டிகளை அளித்து ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறார். அதிலும் ரஜினியின் கபாலி படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுக்கணும் என வலியுறுத்தியதை அறிந்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கோபத்தில் கொந்தளிக்கின்றனர்.

Also Read: பெரிய இடத்தை கடுமையாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய பா.ரஞ்சித்.. வான்டடா தேடிக்கொண்ட ஆப்பு

Trending News