திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மீண்டும் மீண்டும் முட்டாளாக்கும் ரஜினி.. மாஸ்டர் பிளான் போட்டதை அம்பலப்படுத்திய ப்ளூ சட்டை மாறன்

சோசியல் மீடியாவில் ரசிகர்களால் அதிகம் வறுத்தெடுக்கப்படும் ஒரே நபர் ப்ளூ சட்டை மாறன் தான். அவர் எந்த கருத்தை சொன்னாலும் அதற்கு பல எதிர்வினைகள் வந்து சேரும். ஆனால் சில விஷயங்களில் அவருடைய கருத்தை ரசிகர்கள் ஆதரிப்பார்கள். ஆனால் இப்போது அவர் வெளியிட்டு இருக்கும் ஒரு கருத்துக்கு பயங்கர எதிர்ப்பலைகள் கிளம்பி இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் அந்த விஷயம் தற்போது திரையுலகில் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது சமீபத்தில் ரஜினியின் நடிப்பில் 20 வருடங்களுக்கு முன்பு வெளியான பாபா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான அந்த திரைப்படத்தை ரசிகர்களும் ஆர்வத்துடன் பார்த்து நல்ல வரவேற்பு கொடுத்தனர். இருப்பினும் அந்த திரைப்படம் வசூல் சாதனை பெறவில்லை.

அந்த வகையில் பாபா திரைப்படம் படுதோல்வியை தழுவியது. ஏற்கனவே இப்படம் முதல் முறை ரிலீசான போது பல பிரச்சனைகளை சந்தித்து தோல்வி அடைந்தது. அதேபோன்று இரண்டாம் முறையும் பாபா கல்லா கட்டவில்லை என்பதை கேள்விப்பட்ட சூப்பர் ஸ்டார் அதை சந்தோஷமாகவே கடந்து சென்றிருக்கிறார். அவர் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் இந்த திரைப்படம் தோல்வி அடைந்ததை பார்த்து எதற்காக அவர் சந்தோஷப்பட வேண்டும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கலாம்.

Also read: ரஜினியின் கோட்டைக்குள் வெற்றிக்கொடி நாட்டிய ராஜமௌலி.. வசூலை வாரி தந்த படம்

அதற்கான காரணத்தை தான் தற்போது ப்ளூ சட்டை மாறன் அம்பலப்படுத்தி இருக்கிறார். அதாவது ரஜினியின் ஜாதகப்படி அவர் நடிப்பில் வெளியாகும் அடுத்த திரைப்படம் தோல்வியடையும் என்று ஜோசியர் கூறினாராம். ஏற்கனவே அவருடைய அண்ணாத்த திரைப்படத்தை பலரும் தோல்வி படம் என்று கூறி வருகிறார்கள். இதில் அடுத்த படமும் தோல்வி என்றால் நம் நிலைமை அவ்வளவு தான் என்று ரஜினி அதிர்ந்து போயிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அவர் இப்போது நடித்துவரும் ஜெயிலர் திரைப்படத்தையும் அவர் பெரிய அளவில் நம்பவில்லை. ஏனென்றால் பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் மொக்கை வாங்கிய நெல்சன் இந்த படத்தை எப்படி முடிப்பார் என்ற பதட்டமும் அவருக்கு இருக்கிறது. இது பற்றி ஏராளமான செய்திகள் வெளி வந்திருக்கிறது. அதனால்தான் அவர் ஜோசியத்தை நம்பி ஒரு மாஸ்டர் ப்ளான் போட்டு இருக்கிறார்.

Also read: அண்ணாச்சியை விட மோசமாக கலாய்க்கப்பட்ட ரஜினி.. திரும்பி கூட பார்க்காத இளைய தலைமுறை

அதாவது ஏற்கனவே தோல்வி அடைந்த பாபா திரைப்படத்தை இந்த வருடம் வெளியிட்டால் எப்படியும் அது தோல்வி அடைந்து விடும். அந்த வகையில் அடுத்த வருடம் வெளியாகும் ஜெயிலர் திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று அவர் நம்பியிருக்கிறார். அதனால் தான் அவர் நடிப்பில் தாறுமாறு ஹிட்டடித்த எத்தனையோ படங்கள் இருந்தும் இந்த படத்தை அவர் ரிலீஸ் செய்தாராம்.

அவர் எதிர்பார்த்தபடியே இப்படம் தற்போது தோல்வி அடைந்திருக்கிறது. நாம் எது செய்தாலும் முட்டாள் ரசிகர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் என்ற நினைப்பில் தான் ரஜினி இவ்வாறு செய்திருக்கிறார். இதன் மூலம் சூப்பர் ஸ்டார் ஜோசியத்தையே ஏமாற்றிவிட்டார். எல்லாம் சரிதான் ஆனால் ஜெயிலர் படம் எதிர்பார்த்தது போல் வெற்றியடையாவிட்டால் சூப்பர்ஸ்டார் என்ன செய்வார் என்பது தான் தற்போது பலரின் மைண்ட் வாய்ஸ் ஆக இருக்கிறது.

Also read: சத்யராஜ், ரஜினிக்கு நிகராக மிரட்டிய 5 படங்கள்.. இப்பவும் மறக்கமுடியாத என்னம்மா கண்ணு சௌக்கியமா!

Trending News