வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

போலீஸ் தேடும் குற்றவாளிக்கு வாய்ப்பு கொடுத்த ரஜினி.. ஜெயிலர் படத்தில் நடிக்கும் நிஜ அக்யூஸ்ட்

ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நெல்சன் இயக்கும் இந்த திரைப்படத்தில் போலீசால் தேடப்படும் ஒரு குற்றவாளி நடித்து வருகிறாராம். இந்த செய்தி தற்போது ஒரு சிறு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத்தில் பிரபல நடிகராக இருக்கும் விநாயகன் ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார். அந்த வகையில் விஷால் நடிப்பில் வெளிவந்த திமிரு திரைப்படத்தில் கால் நடக்க முடியாதவராக இவர் நடித்திருப்பார். இவர் கடைசியாக தனுஷின் மரியான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Also read:ஜெயிலர் படத்திற்கு எக்கச்சக்க கண்டிஷன் போட்ட ரஜினி.. தெரியாமல் மாட்டிக்கொண்டு முழிக்கும் நெல்சன்

அதைத்தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டாருடன் ஜெயிலர் திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இந்த விஷயம் தான் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது. ஏனென்றால் இவர் சமீபத்தில் தான் ஒரு பாலியல் ரீதியான வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்.

Vinayakam-
Vinayakam-

அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இவர் போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்துள்ளார். அதனால் கேரள அரசு இவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்வோம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. அதன் பிறகே இவர் வெளியில் வந்து சரணடைந்திருக்கிறார்.

Also read:ரஜினி, கமல் கைவிட்ட அந்த மாதிரியான படங்கள்.. வாய்ப்பில்லை என வெளிப்படையாக பேசிய சூப்பர் ஸ்டார்

தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் இவருக்குத்தான் சூப்பர் ஸ்டார் தன்னுடைய படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இப்படிப்பட்ட ஒருவரை தனது படத்தில் ரஜினி ஏன் வில்லனாக நடிக்க வைக்க வேண்டும் என்ற கேள்வி தான் தற்போது அனைவருக்கும் எழுந்துள்ளது.

இதற்கு அவர் எப்படி சம்மதித்தார் என்ற ஆச்சரியமும் ஒருபுறம் பலருக்கும் இருக்கிறது. ஒரு வேலை அவருக்கு இந்த வழக்கு சம்பந்தப்பட்ட விஷயம் தெரியுமா, தெரியாதா என்ற ரீதியிலும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மேலும் ஜாமீனில் வெளிவந்திருக்கும் விநாயகன் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம். இது படத்தின் ஷூட்டிங்கிற்கும் சில சிக்கலை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also read:ஆட்டம் கண்ட ரஜினியின் மார்க்கெட்.. கடைசி 5 படங்களின் சம்பள விவரம்

Trending News