வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

இக்கட்டான சூழ்நிலையில் கை கொடுத்து தூக்கிவிட்ட ரஜினி.. நன்றி மறவாமல் உணர்ச்சிப்பூர்வமாக பேசிய ஜெயிலர் பட நரசிம்மா

Actor Rajini : தற்போது ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜெயிலர் படத்தை அனைவரும் திருவிழா மாதிரி கொண்டாடி வருகிறார்கள். நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளிவந்திருக்கும் இப்படத்தில் பல முக்கியமான ஆர்டிஸ்ட்கள் வெவ்வேறு மொழிகளில் இருந்து நடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் கிளைமாக்ஸ் காட்சியில் தன்னுடைய நடிப்பை டெரராக காட்டிய நரசிம்மா அனைவரது கைதட்டல்களையும் பெற்றுவிட்டார். தமிழ்நாட்டில் எப்படி ரஜினி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் சுற்றி வருகிறாரோ, அதேபோல் கன்னடத்தில் சூப்பர் ஸ்டார் ஆக வருபவர் தான் சிவராஜ் குமார்.

Also read: ரஜினி ஜெயிலர் படத்தால் பழையபடி வரும் ஹீரோ வாய்ப்பு.. ஜெட் வேகத்தில் சும்மா ஸ்விங்ன்னு ஏரிய சம்பளம்

அப்படிப்பட்ட இவர் ஜெயிலர் படத்தின் மூலம் பான் இந்திய அளவில் ஃபேமஸ் ஆகிவிட்டார்.
மேலும் இவருடைய வில்லத்தனமான நடிப்பை கன்னட ரசிகர்கள் அனைவரும் பார்த்து கொண்டாடி வருகிறார்கள். அதனாலயே இப்படம் அங்க வசூல் அளவில் அதிகரித்து வருகிறது. அப்படிப்பட்ட இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தற்போது சென்னையில் தங்கியிருப்பதாக கூறி இருக்கிறார்.

அதற்கு காரணம் இமயமலைக்கு சென்ற ரஜினி, சென்னைக்கு திரும்பி வந்ததும் அவரை சந்தித்து பேச வேண்டும் என்பதற்காக காத்துக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார். அத்துடன் முக்கியமான சில உணர்ச்சிபூர்வமான விஷயங்களையும் பகிர்ந்திருக்கிறார். அதாவது இவருடைய அப்பா ராஜ்குமாரை சந்தன வீரப்பன் கும்பல் கடத்தி வைத்திருந்தது அனைவரும் கேள்விப்பட்டிருப்போம்.

Also read: சிவராஜ் குமாரை பார்த்து பயந்த ஜெயிலர் படக்குழு.. டைகர் இருக்க பயமேன் என அதிர வைத்த ரஜினி

அந்த சமயத்தில் சிவராஜ் குமார் குடும்பத்திற்கு பக்க பலமாக இருந்து அனைத்து உதவிகளையும் செய்து இக்கட்டான சூழ்நிலையில் இருந்து ரஜினி காப்பாற்றியதாக கூறி இருக்கிறார். அவர் செய்த அந்த உதவியை என்றைக்கும் என் வாழ்நாளில் மறக்காமல் அவருக்கு எப்போதும் நன்றி உள்ளவராக இருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

இப்படி ரஜினி செய்த உதவியை மறக்காமல் தற்போது வரை அவர் செய்ததை மனதில் வைத்துக்கொண்டு உணர்ச்சி பூர்வமாக பேசி வருகிறார். அத்துடன் இமயமலையில் இருந்து வந்ததும் அவரை நேரில் சந்தித்து நிறைய விஷயங்கள் பேசி பார்த்த பின்னரே நான் ஊருக்கு செல்வேன் என்று அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

Also read: கமல், விஜய் தான் எங்களை காப்பாத்தினாங்க.. ரஜினி என்னத்த கிழிச்சாரு? எப்போதுமே உலக நாயகன் பெஸ்ட்!

Trending News