திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நண்பருக்காக கால்ஷூட்டை தூக்கிக் கொடுத்த ரஜினி.. சத்தம் இல்லாமல் வேலையை தொடங்கிய தயாரிப்பாளர்

ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், ஜெய், தமன்னா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருவதால் மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் நடிக்கப் போவதாக ஒரு பேச்சு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டான் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்த சிபி சக்கரவர்த்தி குறுகிய காலத்திலேயே சூப்பர் ஸ்டாரை இயக்குவது பலருக்கும் வியப்பை கொடுத்துள்ளது.

Also read:லைக்காவை குழப்பி மொத்த பிளானையும் கெடுத்த மணிரத்தினம்.. ரஜினிக்கு பறிபோன வாய்ப்பு

இந்நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பரும், தயாரிப்பாளருமான கலைப்புலி தாணு சூப்பர் ஸ்டாரை சந்தித்து அவருடைய கால்ஷூட்டை பெற்றிருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கின்றனர். தற்போது தனுஷின் நானே வருவேன் திரைப்படத்தை தயாரித்திருக்கும் தாணு அடுத்ததாக சூப்பர் ஸ்டார் படத்தை தயாரிக்கும் முடிவில் இருக்கிறார்.

தற்போது ரஜினியின் தேதிகளும் கிடைத்துவிட்டதால் அடுத்த கட்ட வேலையை அவர் பரபரப்புடன் ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் இந்த திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாணுவும் அப்படி ஒரு திட்டத்தில் தான் இருக்கிறாராம்.

Also read:பயங்கர உற்சாகத்தில் இருக்கும் ரஜினி.. சந்தோஷத்தில் கொடுக்கப் போகும் அடுத்தடுத்த அறிவிப்பு

அதனால் ரஜினியின் ஆபிஸிலேயே தேசிங்கு பெரியசாமிக்கு ஒரு ரூம் போட்டு கொடுத்து கதையை ரெடி பண்ண சொல்லி இருக்கிறாராம். ஏற்கனவே இப்படி ஒரு விஷயம் பரவி வந்த நிலையில் இந்த செய்தி தற்போது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

அந்த வகையில் இந்த திரைப்படம் யாரும் எதிர்பாராத அளவுக்கு படு மிரட்டலாக இருக்க வேண்டும் என்று தேசிங்கு பெரியசாமி பார்த்து பார்த்து ஸ்கிரிப்ட்டை ரெடி செய்து வருகிறாராம். கூடிய விரைவில் இந்த கூட்டணியின் திரைப்பட அறிவிப்பு வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Also read:ஜெயிலர் படத்தில் இருக்கும் 2 முக்கிய கேரக்டர்கள்.. ரஜினிக்கு இணையாக இருக்கும் பவர்ஃபுல் கதாபாத்திரங்கள்

Trending News