வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தன்னை தாக்கி பேசியவருக்கு கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்த ரஜினி.. அந்த மனசு இருக்கே சார்.!

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம்வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வெளியாக உள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் குஷ்பூ, மீனா, நயன்தாரா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இதில் ரஜினிக்கு தங்கையாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நீண்ட காலமாக அரசியலுக்கு வருவேன் என கூறிவந்த இவர், உடல்நலனை கருத்தில்கொண்டு இனி எப்போதும் அரசியலில் ஈடுபடமாட்டேன் என கூறி தனது மக்கள் மன்றத்தையும் மொத்தமாக கலைத்தார்.

இவர் பொதுவெளியில் எது பேசினாலும் அது சர்ச்சையில் சென்றுதான் முடிகிறது. ஏழ்வர் விடுதலை பற்றி கேட்டபோது எந்த ஏழுபேர் எனக்கேட்டு பிரச்சனையில் மாட்டினார். அதேபோல் துக்ளக் – முரசொலி என இரண்டு பத்திரிக்கைகளையும் ஒப்பிட்டு பேசி பிரச்சனையில் சிக்கினார்.

இவ்வாறு இவர் எதை பேசினாலும் அது சர்ச்சையில் சென்றே முடிகிறது. இவருக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் இருந்த பிரச்னை ஊரறிந்த விஷயம் தான். 90களின் ஆரம்பத்தில் இவர் ஜெயலலிதாவை தனது படங்களின் வசனங்கள் மூலமாக எதிர்த்து பேசியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் தேர்தல் நேரத்திலும்கூட அதிமுகவிற்கு எதிராகவே பேசியிருந்தார். அந்த காலகட்டத்தில் ஜெயலலிதாவும் ரஜினியை தாக்கி பல மேடைகளில் பேசியுள்ளார். ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் நடிகை மனோரமா. இவரும் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக ரஜினியை தாக்கி பல பொதுமேடைகளில் பேசியுள்ளார்.

rajini-manoramma
rajini-manoramma

இதன்பின்னர் மனோரமா படவாய்ப்புகள் இல்லாமல் தவித்துவந்தார். ஆனால், சூப்பர் ஸ்டார் பழசையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் மனோரமாவை கூப்பிட்டு அருணாச்சலம் படத்தில் வாய்ப்பு கொடுத்தாராம். இந்த செய்தியை ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ஆர்வமாக பகிர்ந்து வருகின்றனர்.

Trending News