தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 40 வருடமாக நம்பர் 1 இடத்தில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இன்றும் இவரது படங்கள் வெளியாகும்போது தமிழ்நாட்டுக்கே திருவிழாதான். பல தலைமுறை ரசிகர்களை திருப்திப்படுத்திய ஒரே நடிகர் இவர்தான்.
ரஜினி நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஒரு இளம் இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் விரைவில் நடிக்க உள்ளாராம் ரஜினிகாந்த். அமெரிக்காவில் இருந்து வந்ததும் இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி தன்னுடைய கேரியரில் பல பேருக்கு உதவி செய்துள்ளார். அந்த வகையில் மார்க்கெட் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த நவரச நாயகன் கார்த்திக் மற்றும் இளைய திலகம் பிரபு ஆகிய இருவருக்கும் மீண்டும் தமிழ் சினிமாவில் தங்களுடைய இடங்களை தக்கவைத்துக் கொள்ளப் பெரிதும் உதவி உள்ளார் என்பதை பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கார்த்தி மற்றும் பிரபு ஆகிய இருவருக்கும் ஆரம்பம் நன்றாக இருந்தாலும் இடையில் அவர்களது மார்க்கெட் சறுக்கியது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். அதிலும் பிரபுவின் மார்க்கெட் எல்லாம் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது.
சிவாஜியின் மீதுள்ள மரியாதையால் தன்னுடைய படங்களில் பிரபுவுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுத்து நடிக்க ஒப்புக்கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பிரபு மற்றும் ரஜினிகாந்த் இருவரும் நடித்த பல படங்கள் வெற்றியை பெற்றுள்ளன.
அதேபோல் ரஜினியின் படத்தில் கவனிக்கப்படும் கதாபாத்திரமாக வந்து பின்னாளில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறியவர்தான் நவரச நாயகன் கார்த்திக். இப்படி எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் சக நடிகர்களுக்கும் உதவி செய்த ரஜினிகாந்தை இன்று வரை அவர்கள் மறக்க மாட்டார்கள்.