புதன்கிழமை, ஜனவரி 22, 2025

அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கும் ரஜினி.. பிரம்மாண்டமாக நடக்கப் போகும் ஆடியோ லான்ச்

Actor Rajinikanth: ரஜினி இப்போது இளமை துள்ளலுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வரும் சூப்பர் ஸ்டார் ஜெயிலர் படத்தை முடித்த கையோடு லால் சலாம் படத்தில் குஷியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதை அடுத்து ஜெய் பீம் இயக்குனருடன் இணைய உள்ளார்.

இப்படி பம்பரமாக சுற்றி வரும் தலைவர் அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களை கொடுத்து ரசிகர்களை திக்கு முக்காட செய்தும் வருகிறார். அந்த வகையில் தற்போது வெளிவந்திருக்கும் ஜெயிலர் படத்தின் முதல் பாடல் வேற லெவலில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Also read: அரேபிய குதிரையாக மாறி சூப்பர் ஸ்டாருடன் ஆட்டம் போட்ட தமன்னா.. ட்ரெண்டாகும் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள்

தமன்னாவின் கலக்கல் நடனத்துடன் ரஜினியின் ஸ்டைலும் பாடலை மெருகேற்றி இருக்கிறது. இப்படி சோசியல் மீடியா முழுவதுமே ஜெயிலர் பற்றிய செய்திகள் தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அடுத்ததாக ஒரு இன்ப அதிர்ச்சியையும் பட குழு கொடுத்துள்ளது.

அதாவது ஜெயிலர் படத்தின் பிரம்மாண்டமான ஆடியோ ஃபங்ஷன் வரும் 25ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. இதில் பட குழுவினர் உட்பட இன்னும் பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

Also read: 80-களில் இருந்தே கமல் படத்தை ஓகே பண்ணும் நபர்.. பரட்டை, சப்பானி கேவலமா இருக்குன்னு தூக்கி எறிந்த ஹீரோக்கள்

அண்மை காலமாகவே இளம் நடிகர்கள் உட்பட முன்னணி நடிகர்கள் வரை அனைவரும் தங்கள் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற மாமன்னன், மாவீரன் போன்ற படங்களின் இசை வெளியீட்டு விழா சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்ட் ஆனது.

அதே போன்று லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவும் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட இருக்கிறது. இப்படி ஹீரோக்கள் இசை வெளியீட்டு விழாவையே திருவிழா போல் நடத்தி வரும் நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறது. இதில் ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட பல சுவாரசியங்கள் இருக்கும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Also read: 35 வருடங்களாக பாரதிராஜாவிடமிருந்து ஒதுங்கி இருக்கும் ரஜினி.. ஒரு தடவை பட்டதே போதும்டா சாமி

Trending News