புதன்கிழமை, ஜனவரி 22, 2025

அடுத்தடுத்து ரஜினி நடிக்கவிருக்கும் 3 படங்கள்.. மணிரத்தினத்திற்கு விரித்த பிரம்மாண்ட வலை

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படம் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், ஜெய், தமன்னா ஆகியோர் நடித்து வரும் இந்தப் படம் பலரின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.

அடுத்த வருட வெளியீடாக வர இருக்கும் இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் அடுத்தடுத்து மூன்று திரைப்படங்களில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம். அதில் ஏற்கனவே அவர் சிபிச் சக்கரவர்த்தியுடன் இணைய இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. அது கிட்டத்தட்ட உறுதியான நிலையில் அந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க இருக்கிறார்.

Also read : தமிழ் சினிமாவின் மாற்றத்தை உணர்ந்த 4 நடிகர்கள்.. குறுக்கீடு செய்யாமல் ஒதுங்கும் ரஜினி மற்றும் கமல்

அதைத்தொடர்ந்து ரஜினி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் அடிக்கடி சந்தித்து வந்த இவர்கள் இருவரும் அந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பிறகு ஒரு படம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இது குறித்த அறிவிப்பு பொன்னியின் செல்வன் இரண்டாம் பாக வெளியீட்டிற்கு பிறகு வெளிவர இருக்கிறது.

இப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க இருக்கிறது. இதை அடுத்து ரஜினி தன் மகள் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே லைக்கா நிறுவனத்திடம் ஒரு கதையை சொல்லி சம்மதம் வாங்கி இருக்கிறார். ஆனால் ஹீரோ யார் என்று முடிவு செய்யாமலே இருந்தது.

Also read : சுயம்பு போல் வளர்ந்து சாதித்த இயக்குனர்.. ஆலமரம் போல் தலையில் தூக்கி வைத்து ஆடும் ரஜினி, கமல்

இந்நிலையில் ஐஸ்வர்யா தற்போது தன் அப்பாவை வைத்தே அந்த படத்தை இயக்கி விடலாம் என்று முடிவு செய்து இருக்கிறாராம். அதற்கு ரஜினியும் தற்போது சம்மதம் தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் அடுத்தடுத்து இந்த மூன்று திரைப்படங்களிலும் சூப்பர் ஸ்டார் நடிக்க இருக்கிறார்.

இதுதான் தற்போது திரையுலகில் ஆச்சரியமாக பேசப்பட்டு வருகிறது. ரஜினி இவ்வளவு சுறுசுறுப்பாக மூன்று திரைப்படங்களில் நடிக்க இருப்பது அவருடைய ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் இந்த படங்கள் பற்றிய அறிவிப்பு வெளிவந்து ரசிகர்களை குஷிப்படுத்த இருக்கிறது.

Also read : லைக்காவை குழப்பி மொத்த பிளானையும் கெடுத்த மணிரத்தினம்.. ரஜினிக்கு பறிபோன வாய்ப்பு

Trending News