வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித் வரிசையில் மாட்டிக்கொண்ட ரஜினி.. வெற்றி கொடுத்தும் பிரயோஜனம் இல்லாத நிலை

Actor Rajini: ரஜினியின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஜெயிலர் இப்போது திரையரங்குகளை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் வசூலிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஜெயிலர் வெளியாகி ஏழு நாட்களிலேயே 500 கோடியை நெருங்க இருக்கிறது.

இப்படி பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த ரஜினி தற்போது ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டு உள்ளார். அதாவது ஒரு படம் வெற்றி அடைந்த சூட்டோடு அடுத்த படத்தை ஆரம்பித்தால் தான் அந்த எதிர்பார்ப்பு குறையாமல் அதிகரிக்கும். சிறு இடைவெளி விட்டாலும் அந்த ஆர்வம் குறைந்துவிடும்.

Also read: கமல், விஜய் தான் எங்களை காப்பாத்தினாங்க.. ரஜினி என்னத்த கிழிச்சாரு? எப்போதுமே உலக நாயகன் பெஸ்ட்!

அப்படித்தான் துணிவு படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த நிலையில் அஜித்தின் விடாமுயற்சியை பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் துணிவு வெளியாகி எட்டு மாதங்கள் முடிவடையப் போகும் நிலையிலும் அஜித் தனது அடுத்த படத்தை ஆரம்பிக்கவில்லை.

இதனாலேயே அந்த படத்தின் மீது இருந்த ஆர்வமும், எதிர்பார்ப்பும் தற்போது குறைந்து கொண்டிருக்கிறது. அப்படி ஒரு சிக்கலில் சிக்கும் நிலைமையில் தான் சூப்பர் ஸ்டார் இருக்கிறாராம். அதாவது ஜெயிலர் பட சூட்டிங்கை முடித்த கையோடு லால் சலாம் படத்தில் நடித்து முடித்த ரஜினி இப்போது இமயமலையில் ரிலாக்ஸ் செய்து கொண்டிருக்கிறார்.

Also read: ரஜினி மீது வெறுப்பை கக்கும் படையப்பா நடிகர்.. பெரிய மனுசன நம்பி மோசம் போனது தான் மிச்சம்

அவர் அங்கிருந்து வந்தவுடன் விரைவில் லைக்கா மற்றும் ஞானவேல் கூட்டணியில் தலைவர் 170 படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது லைக்கா இப்படத்தை தொடங்கும் முடிவில் இல்லையாம். சிறிது காலம் போகட்டும் என்ற முடிவில் இருக்கிறதாம்.

இதனால் இயக்குனர் தான் பாவம் நொந்து போய்விட்டாராம். ஏற்கனவே விடாமுயற்சி படம் தள்ளிக்கொண்டே போகிறது. அது தற்போது ஒரு வழியாக ஆரம்பிக்கப்படும் நேரத்தில் லைக்கா தலைவர் படத்தை கிடப்பில் போட்டிருப்பது ரசிகர்களை கடுப்பேற்றி இருக்கிறது. அந்த வகையில் ஒரு வெற்றி கொடுத்தும் பிரயோஜனம் இல்லாமல் ரஜினி இப்போது அஜித் வரிசையில் மாட்டிக் கொண்டுள்ளார்.

Also read: வெற்றிக்காக ரஜினி துணிந்து செய்த காரியம்.. அடுத்த தலைமுறையினரை சீரழிக்கும் லோகேஷ், நெல்சன்

Trending News