திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எங்கே நிம்மதி என அலையும் சூப்பர் ஸ்டார்.. மாலத்தீவுக்கு பின் உடனே கிளம்பும் ரஜினி

Actor Rajini: சூப்பர் ஸ்டார் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளிவர இருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதற்காகவே தற்போது ஒட்டுமொத்த மீடியாக்களும் காத்துக் கொண்டிருக்கிறது.

மேலும் தலைவர் இந்த நிகழ்வில் என்ன பேச போகிறார் என்பதை அறியவும் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இப்படி புகழ் வெளிச்சத்தில் மின்னிக்கொண்டிருக்கும் ரஜினி சமீப காலமாகவே நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறாராம்.

Also read: அந்த ஒரு வரி வச்சே தீருவேன் என ரஜினியிடம் சண்டையிட்ட வைரமுத்து.. இப்ப வரை கொண்டாடப்படும் பாடல்

அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகி தன்னை எப்போதுமே அவர் பிசியாக வைத்துக் கொள்வதும் இதனால் தான். ஏனென்றால் அவருடைய குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சினைகளாக வந்து கொண்டிருக்கிறது. அதுவும் அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை பிரிந்ததிலிருந்தே அவர் ரொம்பவும் உடைந்து போய் இருக்கிறார்.

விவாகரத்து முடிவு வேண்டாம் சேர்ந்து வாழுங்கள் என்று எவ்வளவோ அறிவுரை கூறியும் பலனளிக்காமல் போன நிலையில் இது ரஜினிக்கு பெரும் தலைவலியாகவே மாறி இருக்கிறது. அதனாலேயே அவர் ஜெயிலர் மற்றும் லால் சலாம் பட சூட்டிங் முடித்த கையோடு மாலத்தீவு பக்கம் தனிமையை தேடி சென்றார்.

Also read: உச்சம் தொட்டாலும் புகழ் போதையில் சிக்காத லோகேஷ்.. கமல் முதல் ரஜினி வரை பிரமிக்க வைக்க காரணம்

அது குறித்த போட்டோக்கள், வீடியோக்கள் கூட வைரலானது. மேலும் தலைவர் ஏன் தனியாக செல்கிறார் என்ற கேள்வி கூட எழுந்தது. உண்மையில் சூப்பர் ஸ்டார் நிம்மதியை தேடி தான் இப்போது அலைந்து கொண்டிருக்கிறார். தற்போது மாலத்தீவில் இருந்து ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்திருக்கும் இவர் விரைவில் இமயமலைக்கும் செல்ல இருக்கிறார்.

வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கிளம்பும் அவர் அங்கேயே ஒரு வார காலம் தங்கி இருந்து பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை போன்ற இடங்களுக்கெல்லாம் செல்ல இருக்கிறாராம். இவ்வாறாக காசு பணம் கோடிக்கணக்கில் இருந்தும் கூட சூப்பர் மனதில் நிம்மதி இல்லாமல் தவித்து வருவது ரசிகர்களை வேதனை அடைய செய்துள்ளது.

Also read: ஜெயிலரால் மொத்த சொத்தையும் இழந்த தயாரிப்பாளர்.. ரஜினியை மலைபோல் நம்பி வைத்த கோரிக்கை

Trending News