வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மன்சூர் அலிகான் போல் வம்பில் சிக்கிய ரஜினி.. உங்க வயசுக்கு இப்படி பேசலாமா தலைவரே.!

Rajini-Mansoor Alikhan: கடந்த சில நாட்களாகவே மன்சூர் அலிகான் தான் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளார். திரிஷாவை பற்றி இவர் கூறிய ஒரு விஷயம் காட்டு தீ போல் பரவி மிகப்பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இதற்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் தங்கள் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அதை தொடர்ந்து மன்சூர் இதற்கு விளக்கம் கொடுத்துவிட்டு வேலையை பார்க்க தொடங்கினார். ஆனாலும் இந்த பிரச்சனை முடியாமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதனாலயே இப்போது அவர் பத்திரிகையாளர்களின் முன்பு தன் தரப்பு நியாயத்தை கூறி வருகிறார். அதுதான் ட்விட்டர் தளத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க இப்போது இந்த விவகாரத்தால் ரஜினியும் ஒரு புது வம்பில் சிக்கி இருக்கிறார். அதாவது ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவின் போது அவர் தமன்னா குறித்த ஒரு விஷயத்தை சொல்லி இருந்தார். காவாலா பாடல் ஷூட்டிங் நடக்கும் போது தமன்னா கிட்ட சரியா பேச கூட இல்லை என அவர் கூறி இருப்பார்.

Also read: திரிஷா விஷயத்துல அவங்க பெரிய தப்பு பண்ணிட்டாங்க.. அடாவடியில் முடிந்த மன்சூரின் பிரஸ் மீட்

அந்த வீடியோ தான் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மன்சூர் அலிகான் செய்தது தப்பு என்றால் ரஜினி செய்தது மட்டும் சரியா என ஒரு சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் விஜய், சிரஞ்சீவி என டாப் நடிகர்கள் சக நடிகைகளை பற்றி பேசிய வீடியோ கூட வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் தமன்னா பற்றி பேசியது மேலோட்டமாக தான் இருந்தது. ஆனால் அதையே இப்போது பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் உங்க வயசுக்கு இதெல்லாம் தேவையா தலைவரே என ஒரு குரூப் கண்டனம் தெரிவித்து வருகிறது. ஆக மொத்தம் மன்சூர் அலிகான் பற்ற வைத்த நெருப்பு இப்போது டாப் ஹீரோக்களுக்கும் வினையாக முடிந்துள்ளது.

Also read: மீண்டும் திரிஷாவை வம்புக்கு இழுத்த மன்சூர் அலிகான்.. வெடிக்கும் சர்ச்சை

Trending News