இமயமலையிலிருந்து திரும்பிய உடனே ட்ரீட் வச்சி கொண்டாடப் போவது யார் தெரியுமா.? திரையுலகை தன் வசப்படுத்திய ரஜினி

Actor Rajini: சமீபத்தில் புயல் வந்து அடித்தது போல் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது ரஜினி நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஜெயிலர் படம் தான். பொதுவாக ஒரு படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்தால் அந்த படம் சொல்லிக்கும்படியான வெற்றியை எதிர்கொள்ளாது என்பதுதான் வழக்கம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக ஜெயிலர் படம் பட்டைய கிளப்பி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வசூல் அளவிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்து வருகிறது.

இதனால் நெல்சன் மிகவும் குஷியாக வெற்றியை கொண்டாடி வருகிறார். அதற்கு காரணம் இந்த வெற்றியின் மூலம் அனைவரும் தூக்கிக் கொண்டாடப்படும் ஒரு இயக்குனராக உயர்ந்துவிட்டார். அத்துடன் இப்படத்தை விநியோகம் செய்தவர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் பலரும் பல வருடங்கள் கழித்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர்.

Also read: ரஜினி, கமல் இடத்தை பிடிக்கும் அடுத்த தலைமுறை நடிகர்கள்.. பட்டமே வேண்டாம் என்று ஒதுங்கும் அஜித்

அதற்கு காரணம் வெளியான ஆறு நாட்களிலேயே உலகம் முழுவதும் வசூல் அளவில் 500 கோடியை பெற்று விட்டது. மேலும் வெளியான ஆறு நாட்கள் மட்டுமே இத்தனை கோடி என்றால் இன்னும் போகப் போக பல மடங்கு லாபத்தை அடையும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. அத்துடன் இந்த லாபத்தின் மூலம் விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் அதிக லாபத்தை பெற்றிருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து இன்னும் லாபத்தை பல மடங்காக்கும் என்பதால் மகிழ்ச்சியில் அனைவரும் உறைந்து போய் இருக்கிறார்கள். அதனால் இந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக ரஜினி இமயமலையில் இருந்து திரும்பி வந்ததும் இவரை கொண்டாடும் விதமாக விருந்துகள் மற்றும் பாராட்டுக்கள் என பல ஏற்பாடுகளை நடத்தப் போகிறார்களாம்.

Also read: ஜெயிலர் வெற்றியால் பரபரப்பாகும் ரஜினியின் கால்ஷீட்.. 2024 பிப்ரவரிக்குள் 2 படத்தை ரிலீஸ் பண்ண போட்ட பிளான்

இந்த மாதிரி ஒரு விஷயம் இதுவரை எந்த ஒரு நடிகருக்கும் நடந்ததே இல்லை. என்னதான் லாபம் வந்தாலும் அவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கிற அளவுக்கு எந்த ஒரு நடிகரின் படமும் அமையவில்லை. ஆனால் ரஜினி நடித்த ஜெயிலர் படம் வசூல் அளவில் வேட்டையாடியதால் அனைவரும் சந்தோஷத்தில் திக்கு முக்காடி வருகிறார்கள்.

ரஜினி படம் என்றாலே அதற்கு தனி மவுஸ் தான். அதுவும் 72 வயதில் இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் செய்யக்கூடிய சாத்தியம் சூப்பர் ஸ்டாரிடம் மட்டுமே இருக்கிறது என்று அவர் நிரூபித்துக் காட்டி விட்டார். எல்லா விதத்திலும் நம்பர் ஒன் நான் மட்டும் தான் என்று தன்னுடைய படத்தின் மூலம் மற்றவர்களுக்கு புரிய வைத்துவிட்டார்.

Also read: விக்ரம் படம் ஒன்னும் கமலால ஓடல.. ரஜினியை மிஞ்சிட்டோமுன்னு நினைக்கவே கூடாது ஏன் என கூறும் பிரபலம்

- Advertisement -