திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

யோகி காலில் விழ இதுதான் காரணம்.. சென்னை திரும்பிய தலைவர் கொடுத்த விளக்கம்

Actor Rajini: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெளியாகி 500 கோடியை தாண்டி வசூல் வேட்டையாடி வருகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் செய்த வசூல் சாதனைகள் அனைத்தையும் ஜெயிலர் படம் முறியடித்து வருகிறது. 72 வயதில் ஒரு நடிகரால் இவ்வளவு சாதனை செய்ய முடியுமா என்பதை நிரூபித்து காட்டி இருக்கிறார் ரஜினி.

ஆனால் சமீபத்தில் அவர் செய்த ஒரு காரியத்தால் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். அதாவது உத்திர பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்திருந்தார். ரஜினியை விட 21 வயது குறைவானவர்தான் யோகி. மேலும் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் தான் ரஜினி இவ்வாறு செய்திருக்கிறார் என்று சலசலப்பு ஏற்பட்டது.

Also Read : ஜெயிலர்ல ரஜினிக்கு 80 கோடி சம்பளம் எல்லாம் பொய் கணக்கு.. எம்மாடியோ லாபத்துல ஷேர் மட்டும் இத்தனை மடங்கா!

அதோடு மட்டுமல்லாமல் ஒரு கட்சிக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார் என்றும் பேச்சுக்கள் தொடங்கியது. இந்நிலையில் ஜெயிலர் ரிலீசுக்கு முன்பே இமயமலைக்குச் சென்ற ரஜினி, படம் வெற்றி பெற்ற பின்பு பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். இந்நிலையில் நேற்று சென்னை திரும்பிய தலைவருக்கு ஏர்போர்ட்டில் ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்திருந்தார்கள்.

அதை ஏற்றுக் கொண்ட ரஜினி செய்தியாளர் சந்திப்பிலும் பேசி இருந்தார். இந்த சூழலில் யோகி ஆதித்தியநாத் காலில் விழுந்ததற்கான காரணம் என்ன என்று ரஜினி கூறியிருக்கிறார். அதாவது ஆன்மீகவாதி மற்றும் சந்நியாசிகள் ஆகியோர் என்னை விட வயதில் குறைவாக இருந்தாலும் அவர்களது காலில் விழுவது என்னுடைய வழக்கம்.

Also Read : காதில் விழுந்ததை தவறாக சித்தரித்தாலும் வசூலில் வெளுத்து வாங்கும் ஜெயிலர்.. தனிக்காட்டு ராஜாவாக ஜெயித்து காட்டிய ரஜினி

அதனால் தான் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தேன் என்று இந்த சர்ச்சைக்கு ரஜினி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் ஜெயிலர் படம் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றதற்கு ரசிகர்கள் தான் காரணம் என்று அவர்களுக்கு நன்றியையும் தலைவர் கூறியிருக்கிறார்.

இமாலய வெற்றி பெற்ற ஜெயிலர் தற்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்னும் பல சாதனைகள் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே சூட்டுடன் ரஜினி தனது அடுத்த படங்களிலும் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

Also Read : ஒரே நடிகருக்கு மகள், மனைவி, தங்கையாக நடித்த ஜெயிலரின் பொண்டாட்டி.. அடம்பிடித்து ரஜினியிடம் வாங்கிய வாய்ப்பு

Trending News