புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

தனுஷை கடுப்பேற்றும் சூப்பர் ஸ்டார்.. பகடைக்காயாய் உருட்டப்பட்ட சிவகார்த்திகேயன்

Rajini Hates Dhanush: கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினியின் மருமகன் என்ற அந்தஸ்துடன் கெத்தா நடித்துக் கொண்டிருந்தவர் தான் தனுஷ். ஆனால் இப்போது ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ரஜினி ஈடுபட்டார்.

ஆனால் அது ஒர்க் அவுட் ஆகல, இப்போது தனுஷை கடுப்பேற்ற வேண்டும் என்று ரஜினி சிவகார்த்திகேயனை பகடைக்காயாய் பயன்படுத்துகிறார். தலைவர் 171 படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதியாகிவிட்டது. ஏற்கனவே ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது. ஆனால் ரஜினி தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஆனா இப்போது அவருடைய படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க ஒத்துக்கொண்டார்.

ஏனென்றால் இப்பொழுது சிவகார்த்திகேயனின் நிலைமை சரியில்லை. இதை பயன்படுத்தி தனுஷ் அவரை பீல்ட் அவுட் பண்ண பார்க்கிறார். ஆனால் தற்போது ரஜினி படத்தில் சிவகார்த்திகேயன் சூப்பர் ஸ்டார் சொல்லி தான் நடிக்கிறார். இதன் மூலம் சிவகார்த்திகேயனை தூக்கிவிட ரஜினி பார்க்கிறார். இதை ஒரு உதவியாகத்தான் அவர் செய்கிறார்.

Also Read: ரெமோ மேடையில் சிவகார்த்திகேயன் கதறிய காரணம் இதுதான்.. இப்படியும் ஒரு தயாரிப்பாளரா?

வேண்டுமென்றே சூப்பர் ஸ்டார் செய்த செயல்

அதே சமயம் இப்படி எல்லாம் செய்து தனுஷையும் வெறுப்பேற்றுகிறார். தன்னுடைய மகளின் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சு என்று ஒரு பக்கம் ரஜினிக்கு ஆதங்கம் இருக்கத்தான் செய்கிறது. ஆனா தனுஷ் கட்டிய பொண்டாட்டி மற்றும் பெத்த பிள்ளைகளை எல்லாம் விட்டுவிட்டு செம ஜாலியாக தன்னுடைய சினிமா கேரியரில் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கிறார்.

இதையெல்லாம் பார்ப்பது தான் ரஜினி, தனுஷின் போட்டி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயனை வளர்த்து விட பார்க்கிறார். தனுஷ்- ரஜினி இடையே சிவகார்த்திகேயன் தான் இப்போது பகடைக்காயாய் மாறிவிட்டார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 171வது படத்தில் சிவகார்த்திகேயன் வில்லனாக நடிப்பாரா இல்லை, நல்ல ஒரு கேரக்டர் ரோலில் நடிப்பாரா என்பது இன்னும் சஸ்பென்ஸ் ஆகவே இருக்கிறது.

Also Read: சூப்பர் ஸ்டாரை மிஞ்ச எவராலும் முடியவில்லை.. உலக அளவில் வசூலை வாரி குவித்த 6 தமிழ் படங்கள்

Trending News