தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருப்பவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ். சமீபத்தில் தனுஷுக்கு மிகப்பெரிய கடன் இருந்ததாகவும் அதற்கு ரஜினிகாந்த் பெரிய அளவில் உதவி செய்ததாகவும் கோலிவுட் வட்டாரங்களில் ஒரு தகவல் உள்ளது.
நடிகராக இருந்த வரை நன்றாக இருந்தார் தனுஷ். ஆனால் என்றைக்கு மனைவிக்கு உதவி செய்வதற்காக தயாரிப்பை கையில் எடுத்தாரோ அன்றிலிருந்தே அவருக்கு நிம்மதியான உறக்கம் இல்லை என்கிறார்கள் தனுஷ் வட்டாரங்கள்.
தனுஷ் தயாரித்த வேலையில்லா பட்டதாரி, காக்கா முட்டை போன்ற சில படங்களை தவிர பெரும்பாலான படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. ஒரு கட்டத்தில் கடன் அதிகமாகி கழுத்தை நெறிக்கும் அளவுக்கு வந்துவிட்டது.
எங்கு திரும்பினாலும் தப்பிக்க முடியாத சூழ்நிலையில்தான் தன்னுடைய மாமனார் ரஜினிகாந்திடம் தஞ்சமடைந்துள்ளார் தனுஷ். மொத்தத்தையும் கேட்டறிந்த ரஜினி சம்பளமே வாங்காமல் காலா என்ற படத்தில் நடித்தார்.
ரஜினி நல்ல எண்ணத்தில் செய்திருந்தாலும் தனுஷின் நேரமோ என்னமோ காலா படம் படுதோல்வியை சந்தித்து அவருடைய தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனத்தை இழுத்து மூட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளிவிட்டது.
அதன் பிறகு எப்படியோ தொடர்ந்து பல படங்களில் வேறுவேறு தயாரிப்பாளர்களிடம் நடித்து தற்போது மொத்த கடனையும் கட்டி விட்டு நிம்மதியாக இருக்கிறாராம் தனுஷ். கடந்த மூன்று வருடங்களில் அவர் சம்பாதித்ததில் முக்கால்வாசி கடன் கட்டவே சரியாகி விட்டதாம். அந்த விரக்திதான் தற்போது அவரை வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு படங்கள் ஒப்பந்தம் செய்து நடிக்க வைக்க உந்துகோலாக இருக்கிறது என்கிறார்கள் தனுஷ் வட்டாரங்கள்.