வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஜய்க்கு கன்டென்ட் கொடுத்த முத்துவேல் பாண்டியன்.. லியோ மேடையில் சம்பவம் செய்ய போகும் தளபதி

Leo Movie: தளபதி விஜய்யின் ஆடியோ லான்ச் விழாவுக்கு தான் ஒட்டுமொத்த ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் விஜய் தனது பட விழாவில் சொல்லும் குட்டி ஸ்டோருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் விஜய் அதில் ஏதாவது உள்ளர்த்தம் வைத்து தான் கதையைக் கூறுவார்.

மேலும் ரஜினி ஜெயிலர் பட விழாவில் காக்கா மற்றும் பருந்து கதையை கூறியிருந்தார். இதில் காக்கா என்று மறைமுகமாக விஜய்யை தான் குறிப்பிட்டிருந்தார் என பலரும் கருத்து கூறி வந்தனர். இதற்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக விஜய்யும் ஒரு கதையை ரெடி பண்ண காத்துக் கொண்டிருந்தார்.

Also Read : லிப்லாக், படுக்கையறை காட்சிகளில் தாராளம் காட்டும் பிக் பாஸ் ஜோடி.. எல்லாமே விஜய் அப்பா SAC போட்ட விதை

ஆனால் ரஜினியை இப்போது விஜய்க்கு கன்டென்ட் கொடுத்துவிட்டார். ஜெயிலர் படத்தின் வெற்றியை மறக்கும் அளவிற்கு ரஜினி காலில் விழுந்த செயல் தமிழ்நாட்டில் மீண்டும் பத்தி எரிகிறது. மேலும் இந்த சர்ச்சை காரணமாக ரஜினியின் அடுத்த படம் ஓடுமா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

ஜெயிலர் வெற்றியை பார்த்து விஜய்யே பயந்த நிலையில் இப்போது ரஜினி தானாகவே வந்து பிரச்சனையில் மாட்டிக் கொண்டது தளபதிக்கு கன்டென்ட் ஆக மாறிவிட்டது. இதை தான் ஆடியோ லாஞ்சில் பேசி விஜய் ஸ்கோர் செய்ய இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் அரசியல் நகர்வு பற்றியும் கண்டிப்பாக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : இப்பவும் 900 தியேட்டர்களில் வெற்றியை கொண்டாடும் ஜெயிலர்.. ஆன விக்ரம் படம் ஓட அருண் விஜய்க்கு ஆடர் போட்ட கமல்

ஒரு வழியாக சூப்பர்ஸ்டார் சர்ச்சை ஓய்ந்த நிலையில் ஜெய படத்தின் மூலம் மாபெரும் வெற்றி கண்ட ரஜினி இப்போது யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததால் பெரும் சர்ச்சையை சந்தித்திருக்கிறார். அதற்கு அவர் என்னதான் காரணம் சொன்னாலும் மக்கள் அதை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.

இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு லியோ விழாவில் சம்பவம் செய்ய இருக்கிறார் விஜய். மேலும் இப்போது ஜெயிலருக்கு போட்டியாக லியோ படம் கண்டிப்பாக அதிக வசூல் செய்யும் என்ற நம்பிக்கை தளபதிக்கு வந்து விட்டதாம். ஆகையால் இப்போது ஒட்டுமொத்த சினிமாவும் லியோ ஆடியோ பங்ஷனை எதிர் நோக்கி காத்திருக்கின்றனர்.

Also Read : விஜய்க்கு சொம்படித்து ரஜினியை கவிழ்த்து விடும் பிரபலம்.. ஜெயிலர் வெற்றிக்கு சொன்ன மொக்கையான காரணம்

Trending News