திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

அமெரிக்காவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. காட்டுத்தீயாய் வைரலாகும் புகைப்படம்

அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்தபின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று உடல் நிலையை பரிசோதனை செய்து கொள்ள தனி விமானத்தில் சென்றார்.

அங்கு சென்ற சூப்பர் ஸ்டார் மையோ கிளினிக் என்ற மருத்துவமனையில் பரிசோதனை செய்து விட்டு வெளியே வந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீ போல் பரவி வருகிறது.

rajini-mayo
rajini-mayo

சிறுத்தை சிவா இயக்கத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா என்று பெரிய பட்டாளமே நடித்துள்ள அண்ணாத்த படம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கண்டிப்பாக அடுத்த பொங்கலுக்கு இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பின் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ரத்த கொதிப்பு ஏற்பட்டு ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்றார்.

இதனால் தனது அரசியல் வருகை தூக்கி எறிந்து விட்டு தற்போது உடல்நிலையை பார்த்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் சிங்க நடை போட்டு தமிழகத்திற்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுதல்.

Trending News