செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

செய்தியை கேட்ட ரஜினி ஹேப்பி.. பேரன்களை வைத்து ஆடு புலி ஆட்டம் ஆடும் சூப்பர் ஸ்டார்

தனுஷும் ஐஸ்வர்யாவும் விவாகாரத்து அறிவிப்புக்கு பின்பு, நீண்ட நாட்கள் கழித்து இருவரும் சேர்ந்தது போல் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது, இந்த புகைப்படத்தில் இவர்களின் மகன்கள் யாத்ரா, லிங்கா, விஜய் ஜேசுதாஸ் மற்றும் அவர் குடும்பத்தினர் உள்ளனர்.

தனுஷ்-ஐஸ்வர்யாவின் மூத்த மகன் யாத்ரா படிக்கும் பள்ளியில் இன்று விளையாட்டு போட்டி நடைபெற்று உள்ளது. அதில் யாத்ரா ஸ்போர்ட்ஸ் கேப்டனாக உறுதிமொழி எடுத்ததாக ஐஸ்வர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் கணவன், மனைவி இருவரும் பங்கேற்றுள்ளனர்.

Also Read : 23 வருடங்கள் கழித்து ரஜினியுடன் இணையும் நடிகை.. சீக்ரெட்டாக வெளிவந்த ஜெயிலர் அப்டேட்

சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு இன்று டபுள் ட்ரீட் ஆகி விட்டது. மகளை பற்றி கவலைபட்டு கொண்டிருந்த ரஜினிக்கு இன்று தனுஷும், ஐஸ்வர்யாவும் பெற்றோர்களாக பள்ளிக்கு சென்றிருப்பது ஒரு பக்க மகிழ்ச்சி, மேலும் ஜெயிலர் பட போஸ்டரின் வரவேற்பும் இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

இன்னும் இரண்டு மாதங்களில் தனுஷ்-ஐஸ்வர்யாக்கு 18 ஆம் ஆண்டு திருமண நாள் வரவிருக்கிறது. அதற்குள் அவர்கள் மீண்டும் இணைந்து விட வேண்டும் என்பதே, ரஜினி உட்பட அவருடைய குடும்பத்தினர் அனைவரது ஆசையாகவும் உள்ளது.

Also read : மத்திய அரசுக்கு செவிசாய்க்கும் ரஜினி.. கண்டும் காணாமல் இருக்கும் டாப் நடிகர்கள்

சூப்பர் ஸ்டாரும் தன்னுடைய பேரன்கள் யாத்ரா மற்றும் லிங்காவிடம் அப்பா, அம்மா இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளாராம். இளையராஜா இசை நிகழ்ச்சி, க்ரெ மென் ப்ரமோஷன் , திருச்சிற்றம்பலம் ஆடியோ லாஞ்சு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு யாத்ரா மற்றும் லிங்கா மக்களின் கவனத்தி ஈர்த்து விட்டனர்.

இன்றைய காலத்தில் சினிமா பிரபலங்கள் பலர் தங்களுடைய ஈகோவினால் குடும்ப வாழ்க்கையிலிருந்து விலகி போகிறார்கள், ஆனால் தனுஷ்-ஐஸ்வர்யா தங்களுக்குள் கருத்து மோதல்கள் இருந்தாலும் ஒரு நல்ல பெற்றோருக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள்.

Also read: இதுவரை ரஜினி பணியாற்றாத ஒரு லெஜன்ட்.. கமலுக்கு முன்பே காமெடியில் கலக்கிய ஜாம்பவான்

Trending News