தற்போது முன்னணியில் இருக்கும் விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்கள் ரிலீசாகும் முதல் நாள் கிட்டதட்ட 30 கோடி வரை வசூல் செய்து வருகிறது. இன்று கோடிகள் சாதாரணமாக இருந்தாலும் அன்றைய காலகட்டங்களில் ஒரு கோடி என்பது 100 கோடிக்கு சமம்.
வில்லன் நடிகராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி 40 வருடமாக நம்பர் 1 இடத்தில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அப்போதிலிருந்து இப்போது வரை ரஜினிகாந்த் படம் என்றாலே முதல் நாள் முதல் ஷோ பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.
வயதானாலும் சிங்கம் சிங்கம் தான் என்பதை படத்துக்குப்படம் நிரூபித்து வருகிறார் ரஜினிகாந்த். கடைசியாக வெளியான தர்பார் படம் மட்டுமே ரஜினியின் கேரியரில் கொஞ்சம் சறுக்கலை ஏற்படுத்தியது. ஆனால் இதற்கெல்லாம் அவர் அசர மாட்டார்.
அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த படம் டபுள் மடங்கு வசூல் செய்து விடும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள் வட்டாரங்கள். இது ஒருபுறமிருக்க, தமிழ் சினிமாவில் முதல் நாள் ஒரு கோடி வசூல் செய்த முதல் படம் ரஜினியின் ராஜாதி ராஜா தான்.
காமெடி நடிகர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் நடித்த ராஜாதி ராஜா திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்த படம்தான் தமிழ் சினிமாவில் முதல் நாள் ஒரு கோடி வசூலித்த முதல் படம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.
பக்கா கமர்சியல் படமாக உருவாகியிருந்த ராஜாதிராஜா திரைப்படம் ரஜினி கேரியரில் மறக்க முடியாத படமாக அமைந்தது. மேலும் தெலுங்கிலும் ராஜாதி ராஜா என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றிக்கொடி நாட்டியது.